'நெறைய காசு கொடுத்து ஏலம் எடுத்துட்டா...' 'போடுற பால் எல்லாமே ஸ்விங் ஆயிடுமா...' 'ஏற்கனவே ஸ்ட்ரெஸ்...' 'இதுல இந்த ஏலம் வேற...' - கலக்கத்தில் 'ஸ்பீடு' புயல்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதன் காரணமாக அது உளவியல் ரீதியான வித்தியாசமான அழுத்தத்தைக் கொடுக்கிறது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பாட் கமின்ஸ் தெகூறியுள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பாட் கமின்ஸை ரூ.15.5 கோடிக்கு வாங்கியுள்ளது. இவ்வளவு அதிகமான தொகையில், அந்த அணிக்காக ஆடுவதன் அழுத்தம் பற்றி பாட் கமின்ஸ் கூறினார், அப்போது “தொழில்பூர்வமான கிரிக்கெட்டை எங்கு ஆடினாலும் பெரிய அளவில் அழுத்தம் இருக்கும்.

நன்றாக ஆடினால், தொடர்ந்து நன்றாக விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். மோசமாக விளையாடினால் நமக்கு பேசப்பட்ட விலையை வைத்து விமர்சனம் எழும். ஏலம் மற்றுமொரு நெருக்கடியைக் கொடுக்கிறது. இதனை நாம் கையாள்வது முக்கியம். வீரர்கள் இதனால் உண்டாகும் எதிர்பார்ப்புகளை இன்னும் நன்றாகக் கையாளக் கற்றுக் கொண்டால் மட்டுமே சிறப்பான பங்களிப்பை செலுத்த முடியும்.

                               

நாம் பெரிய விலை கொடுத்து அணி உரிமையாளரால் வாங்கப்பட்டுள்ளோம் என்பதற்காக பந்துகள் திடீரென பயங்கரமாக ஸ்விங் ஆகப்போவதில்லை. அல்லது பிட்ச் கிரீன் டாப் ஆக மாறிவிடப் போவதில்லை. அல்லது பவுண்டரிகள் பெரிதாகப் போவதில்லை. அதே விளையாட்டு ஆடுகளம்தான்.

                                         

மேலும் கம்மின்ஸ் கூறுகையில், கோச் பிரண்டென் மெக்கல்லம் என்னை நன்றாக ஆதரிக்கிறார், அது என் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். அவருக்கு எதிராகவும் ஆடியுள்ளேன். இருந்தும் அவர் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கொடுப்பினை . இங்கு வந்து அவருடன் சேர்ந்து பணியாற்ற முடிவது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது” என்று கூறியுள்ளார் பாட் கமின்ஸ்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்