நன்கொடை வழங்க ‘PM CARES’-ஐ செலக்ட் பண்ண காரணம் என்ன..? KKR வீரர் பேட் கம்மின்ஸ் விளக்கம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வாங்குவதற்கு பிரதமர் கேர்ஸ்-க்கு நன்கொடை அளித்ததற்கான காரணத்தை பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருபவர் ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ். இவர் சமீபத்தில் பிரதமர் கேர்ஸ்-க்கு 50 ஆயிரம் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 37 லட்சம்) நன்கொடை அளித்தார். இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் இல்லாமல் உயிரிழக்கும் மக்களுக்கு, ஆக்சிஜன் வாங்குவதற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ஐபிஎல் போட்டியில் விளையாடும் சக வீரர்களையும் உதவ முன்வர வலியுறுத்தியுள்ளதாகவும் பேட் கம்மின்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில் பிரதமர் கேர்ஸ்-க்கு நிதியளிக்கும் முடிவை எடுத்ததற்கான காரணத்தை பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். அதில், ‘கொல்கத்தா அணி வீரர்கள் சிலருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள்தான் PM CARES பற்றி கூறினார்கள். ஷாருக்கானும் அதில் நன்கொடை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதனால்தான் நானும் அதற்கு நன்கொடை வழங்கினேன்’ என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர்,  ‘தற்போது ஆஸ்திரேலியா திரும்பியுள்ள சில வீரர்களும் இந்தியாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். இன்னும் சில நாட்களில் அதிக பேர் நன்கொடை வழங்குவார்கள்’ என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். பேட் கம்மின்ஸை தொடர்ந்து மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான பிரட் லீயும் 40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்