ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு.. சோகத்தில் ரசிகர்கள்.. கருப்பு பட்டை அணிந்து களமிறங்கிய வீரர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

                           Images are subject to © copyright to their respective owners.

Also Read | காதலியை கரம் பிடித்த பிரபல RCB வீரர்.. வாழ்த்தும் கிரிக்கெட் பிரபலங்கள்.. வைரலாகும் புகைப்படங்கள்

முன்னதாக, இந்த பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தக்க வைத்திருந்தது. தொடர்ந்து 3 ஆவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் அசத்தலான ஆட்டம்

இதனையடுத்து, தற்போது ஆரம்பமாகியுள்ள நான்காவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதன்படி ஆடி வரும் அவர்கள், ஆரம்பத்தில் இருந்து நிதானமாக அடி ரன் குவித்தனர். தொடர்ந்து 2 ஆவது நாளிலும் மிக அசத்தலாக ஆடி ரன் சேர்த்து வருகின்றனர் ஆஸ்திரேலிய அணியினர். கவாஜா 150 ரன்களும், கேமரூன் கிரீன் 95 ரன்களும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 300 ரன்களை கடந்து ஆடி வரும் சூழலில், இருந்திய அணிக்கு பெரிய சவால் காத்திருப்பதாக ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு

இந்த நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயாரான மரியா கம்மின்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சூழலில் தற்போது உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னதாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலிய அணியை தலைமை தாங்கி வந்தார். ஆனால் இரண்டு போட்டிகள் முடிவடைந்திருந்த சூழலில் தனது தாயார் உடல் நலக்குறைவாக இருப்பதன் காரணமாக அவர் ஆஸ்திரேலியா கிளம்பி சென்றிருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

சோகத்தில் ரசிகர்கள்

இதன் காரணமாக தொடரின் பாதியில் இருந்து அவர் விலகி சொந்த ஊர் திரும்பியிருந்த சூழலில் மூன்றாவது போட்டிக்குள் திரும்பி வந்து விடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதற்குள் கம்மின்ஸ் திரும்பி வராததால் அந்த அணியின் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் தான் சிகிச்சை பலனின்றி  கம்மின்ஸின் தாயார் உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸின் தாயார் மறைவு கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியினர் கருப்பு நிற பட்டையை அணிந்து அஞ்சலி செலுத்தும் விதமாகவும் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்திரேலியா அணி இரங்கல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், மரியா கம்மின்ஸ் இறந்த செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தோம் என்றும் ஆஸ்திரேலிய அணியின் சார்பாக மனமார்ந்த வருத்தத்தை பேட் கம்மின்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய அணியினர் கையில் கருப்பு நிற பட்டை அணிந்து மரியாதை செலுத்தும் விதமாக விளையாட உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதே போல, பேட் கம்மின்ஸ் தாயார் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் சார்பிலும் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | தங்க மாட்டல் போடனும்ன்னு 25 வருசமா கனவு கண்டாங்க.. சர்ப்ரைஸ் கொடுத்து தாயை கண்கலங்க வெச்ச மகள்!!.. எமோஷனல் வீடியோ!!

PAT CUMMINS, PAT CUMMINS MOTHER, PAT CUMMINS MOTHER PASSED AWAY, AUSTRALIA PLAYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்