‘ப்ரோ இது அவங்கன்னு நெனச்சு என்னை டேக் பண்ணிட்டீங்க’!.. பேட் கம்மின்ஸ் செய்த ஒரு மிஸ்டேக்.. ட்விட்டரில் நடந்த கலகலப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடிய பேட் கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் மயங்க் அகர்வாலை தவறுதலாக  டேக் செய்த போஸ்ட் ஒன்று வைரலாகி வருகிறது.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் சார்பாக, ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் விளையாடினார். இந்த ஐபிஎல் தொடரில் விலையாடிய கொல்கத்தா வீரர் வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர் மற்றும் ஹைதராபாத் அணியின் சாஹா, டெல்லி அணியின் அமித் மிஸ்ரா ஆகிய வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்தது.

இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்களது நாட்டுக்கு திரும்பியுள்ளனர். இதில் ஆஸ்திரேலியா-இந்தியா இடையே மே 15-ம் தேதி வரை விமான சேவை தடை செய்யப்பட்டுள்ளது. அதனால் ஆஸ்திரேலிய வீரர்கள் மட்டும் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் உட்பட 38 பேரை மாலத்தீவுக்கு பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது. மே 15-க்கு பிறகு அங்கிருந்து அவர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

இந்த நிலையில் Players Lounge சேனலுக்கு பேட் கம்மின்ஸ் பேட்டி ஒன்று அளித்திருந்தார். இவரை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பின்னியின் மனைவியும், தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான மயந்தி லங்கர் (Mayanti Langer) பேட்டி கண்டார். இந்த வீடியோவை Players Lounge சேனல் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இந்த பதிவை டேக் செய்து பதிவிட்டிருந்த பேட் கம்மின்ஸ், தொகுப்பாளினி மயந்தி லங்கரை டேக் செய்வதற்கு பதிலாக, பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரான மயங்க் அகர்வாலை டேக் செய்துவிட்டார். உடனே, நீங்கள் தவறான நபருக்கு டேக் செய்துவிட்டதாக மயங்க் அகர்வால் பதிலளித்துள்ளார். இதற்கு கீழே மயந்தி லங்கர் இரண்டு சிரிக்கும் ஸ்மைலியை பதிவிட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் பேட் கம்மின்ஸ், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வாங்க 50 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 37 லட்சம்) நன்கொடை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்