"என் மேல அவங்களுக்கு அதிக 'பாசம்'.. அதுக்காக தான் இத சொல்றேன்.." 'இந்திய' மக்கள் மீதுள்ள அக்கறையில் 'பேட் கம்மின்ஸ்' சொன்ன 'விஷயம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் சீசன், இந்தியாவில் ஆரம்பமாகி கிட்டத்தட்ட பாதி லீக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட சில அணிகளைச் சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பிசிசிஐ இந்த முடிவை எடுத்திருந்தது. இதற்கு முன்பாகவே, இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை, மற்ற எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு, உயரத்தை தொட்டது. அதே போல, கொரோனா மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டிருந்தது.
இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு மத்தியில், இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வேண்டுமா என பலரும் விமர்சனம் செய்திருந்தனர். இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் (Pat Cummins), ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கொல்கத்தா அணி வீரர்களான வருண் மற்றும் சந்தீப் ஆகியோருக்கு தான், கொரோனா தொற்று இருப்பது ,முதன் முதலில் உறுதியானது. இதனைத் தொடர்ந்து, கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருந்த அனைத்து வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பரிசோதனைக்கு பின் பேட் கம்மின்ஸிற்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, சகநாட்டு வீரர்களுடன் பேட் கம்மின்ஸ் மாலத்தீவில் முகாமிட்டுள்ளார். இம்மாதம் 15 ஆம் தேதி வரை, அவர்கள் அங்கு தங்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது குறித்து பேசிய பேட் கம்மின்ஸ், 'இந்தியாவில் இருக்கும் போது, எப்போதும் நான் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததாக கருதியதில்லை. நாங்கள் உயர் ரக ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோம். மக்களின் பிரச்சனைகளில் இருந்து பிரிக்கப்பட்டவன் போன்றும், என்னால் உதவி செய்ய முடியாதவன் போன்றும் வருந்தினேன்.
நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுவது என்பது, தேவையான ஒன்று தான். சிலர், இந்த மாதிரியான நேரத்தில், ஐபிஎல் தொடர் தேவையா என கேள்வி எழுப்புகின்றனர். ஆனால், இந்திய மக்கள் அனைவரும், ஊரடங்கு சமயத்தில், 3 - 4 மணி நேரம் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதை வெகுவாக பாராட்டுகின்றனர்.
அதே போல, இரவு நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், இந்திய மக்களை வீட்டிலேயே இருக்க வைக்க அது உதவியது. இந்திய மக்கள் என்னிடம் மிகுந்த அன்பைக் காட்டி வருகின்றனர். அவர்கள் மிகவும் அற்புதமானவர்கள். இந்த கடுமையான நேரத்தில், அவர்கள் என் மீது காட்டிய அன்பில் கொஞ்சமாவது காட்ட வேண்டும் என நினைக்கிறேன்' என பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், தன்னால் முடிந்த நிதியை இந்திய மக்களுக்காக பேட் கம்மின்ஸ் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "எல்லாரும் 'ஐபிஎல்' வேணாம்'ன்னு சொல்றாங்க.. ஆனா, இதுல வந்த 'சம்பளத்துல' தான்.." 'இளம்' வீரர் சொன்ன 'விஷயம்'!.. மனதை கலங்கடித்த 'உண்மை'!!
- "அந்த பையனோட திறமைக்கு, 'ஆஹா, ஓஹோ'ன்னு பாராட்டி இருக்கணும்.. ஆனா, யாருமே கண்டுக்கல.." 'இளம்' வீரருக்காக ஆதங்கப்பட்ட 'சேவாக்'!!
- 'சிஎஸ்கே' அனுப்பிய 'ஃகிப்ட்'.. மகிழ்ச்சியுடன் 'ட்வீட்' செய்த இங்கிலாந்து 'வீராங்கனை'.. வைரலாகும் 'புகைப்படம்'!. "இவங்க வெறித்தனமான 'CSK' ஃபேன் போல!!"
- "சீக்கிரமா குணமடைஞ்சு வாங்கப்பா.." பிரபல 'இந்திய' வீரரின் 'மகள்' வரைந்த 'ஓவியம்'.. உருகிப் போன 'நெட்டிசன்கள்'!!
- "'இந்தியா' எனக்கு எப்போவும் 'ஸ்பெஷல்'.. அதுக்காக இது கூட பண்ணலன்னா எப்படி??.." 'சிஎஸ்கே' வீரர் செய்த 'உதவி'!!
- "இப்டி எல்லாம் நடக்குறத பாத்ததும்.. மொத்தமா நான் நொறுங்கியே போயிட்டேன்.." மனமுடைந்த 'பீட்டர்சன்'!!
- "நான் 'ஐபிஎல்' ஆட 'செலக்ட்' ஆனதும் அதிகமா சந்தோசப்பட்டது அவங்க தான்.." 'இந்திய' வீரரை துயரத்தில் ஆழ்த்திய 'சம்பவம்'.. கலங்கிய 'நெட்டிசன்கள்'!!
- BREAKING: 'ஐபிஎல்' வட்டாரத்தில் வேகமாக பரவும் 'கொரோனா'... 'பிசிசிஐ' எடுத்த 'அதிரடி' முடிவு!!
- 'கொல்கத்தா' வீரர்களுக்கு உறுதியான 'கொரோனா'.. "2 பேரும் இப்போ எப்படி இருக்காங்க?.." 'KKR' தலைமை அதிகாரி வெளியிட்ட 'தகவல்'!!
- ‘முடிவை மாற்றிய பேட் கம்மின்ஸ்’!.. ஆக்சிஜன் வாங்க PM CARES-க்கு வழங்கிய நன்கொடை குறித்து புதிய அறிவிப்பு..!