‘முடிவை மாற்றிய பேட் கம்மின்ஸ்’!.. ஆக்சிஜன் வாங்க PM CARES-க்கு வழங்கிய நன்கொடை குறித்து புதிய அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்சிஜன் வாங்குவதற்காக PM CARES-க்கு நன்கொடை வழங்கிய ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு  உதவும் நோக்கில், பிரதமர் மோடியின்  PM CARES Fund-க்கு 50,000 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.37 லட்சம) நன்கொடை அளித்தார். பேட் கம்மின்ஸின் இந்த செயலை கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இந்த நிலையில் பேட் கம்மின்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  PM CARES-க்கு அளிக்கப்பட்ட நன்கொடையை ஆஸ்திரேலியாவின் UNICEF தொண்டு நிறுவனத்துக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார். UNICEF தொண்டு நிறுவனம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துடன் இணைந்து, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளது.

இந்தியாவுக்கு மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன் போன்றவற்றை வழங்க ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூலம் UNICEF தொண்டு நிறுவனம் உதவ உள்ளது. அதனால் பேட் கம்மின்ஸ் PM CARES-க்கு வழங்கிய நன்கொடையை இங்கு மாற்றியதாக சொல்லப்படுகிறது.

மேலும் அவரது சமூக வலைதள பதிவுக்கு கீழே, PM CARES-க்கு வழங்கிய நன்கொடைகள் மக்களை சரியாக சென்றடைவதில்லை என ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வந்ததை அடுத்து, இந்த முடிவை பேட் கம்மின்ஸ் எடுத்ததுள்ளதாக DNA, CricTracker போன்ற ஊடகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு பேட் கம்மின்ஸ் ட்விட்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்