செஸ் ஒலிம்பியாட்: ஆட்டத்தில் கலக்கும் பார்வை மாற்றுத்திறனாளி வீராங்கனை நடாஷா.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, முதல் முறையாக இந்தியாவில், அதுவும் தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?

உலகளவில், மொத்தம் 2000 வீரர் வீராங்கனைகள் வரை, இந்த செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் மிக மிக விறுவிறுப்பாக செஸ் போட்டிகள் சென்று கொண்டிருக்கிறது.

இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளம் வீரர் மற்றும் வீராங்கனைகள், ஒலிம்பியாட் தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கவனம் ஈர்த்து வருகின்றனர்.

இதுபோக, வெளிநாட்டைச் சேர்ந்த சிலரும், 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில், அதிக கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில், பியூட்டோ ரிகா நாட்டின் சார்பாக, பார்வை சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்று வரும் நிலையில், அவரது ஆட்டத் திறன் பலர் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

நடாஷா மொர்லஸ் சான்டோஸ் என்ற பெண், பிறக்கும் போது இடது கண் முழுமையாக பார்வை இன்றியும், வலது கண் பார்வை குறைபாட்டுடனும் பிறந்துள்ளார். பார்வையின் சவால் ஒரு பக்கம் இருந்தாலும், 12 வயது முதல் செஸ் போட்டியில் ஆடி வரும் நடாஷா, அதில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்றும் விரும்பி உள்ளார். தொடர்ந்து செஸ் போட்டியில் இவர் காட்டிய ஆர்வமும், திறமையும் பியூட்டோ ரிகா நாட்டின் முன்னணி செஸ் வீராங்கனைகளில் ஒருவராகவும் அவரை மாற்றி இருந்தது.

இது ஒரு புறம் இருக்க, நடாஷாவின் பெற்றோர்கள் சதுரங்க பின்புலம் இல்லாமல் இருந்த போதும், மகளின் ஆர்வத்தின் பெயரில் அவருக்கு பயிற்சி அளிக்கவும் உதவி செய்துள்ளனர். செஸ் போட்டியின் மீது ஆர்வம் மற்றும் கடின உழைப்பின் காரணமாக, கடந்த 2015 ஆம் ஆண்டு சர்வதேச பெண் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தையும் நடாஷா பெற்றிருந்தார்.

தற்போது 24 வயதாகும் நடாஷா, செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரே ஒரு பார்வை சவால் உள்ள போட்டியாளராக பங்கேற்றுள்ளார். நடாஷாவுக்கு பார்வை குறைபாடு இருப்பதன் காரணமாக, அவருக்கு உதவுவதற்காக தன்னார்வலர்கள் இரண்டு பேர் சதுரங்க காய்களை நகர்த்தி வருகின்றனர்.

முதல் சுற்றில் தோல்வி அடைந்த நடாஷா, இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்ற நிலையில், மூன்றாவது சுற்றில் டிராவும் செய்துள்ளார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பது, மிகப்பெரிய வாய்ப்பாக தான் கருதுவதாகவும், அடுத்தடுத்து சுற்றுகளில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வதாகவும் நடாஷா தெரிவித்துள்ளார்.

Also Read | 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் : நிறைமாத கர்ப்பிணியாக களமிறங்கும் கிராண்ட் மாஸ்டர்.. கவனம் ஈர்த்த வீராங்கனை.. "யாருப்பா இந்த ஹரிகா??"

PARTIALLY VISUALLY IMPAIRED, CHESS OLYMPIAD, செஸ் ஒலிம்பியாட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்