‘ஓய்வை அறிவித்த கையோடு’... ‘மும்பை இந்தியன்ஸ் அணியில் ஸ்பெஷல் பொறுப்பேற்ற வீரர்’... ‘கேப்டன் குறித்து பேசியது தான் காரணமா?’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் கிரிக்கெட் வீரர் பார்த்தீவ் பட்டேல் கேப்டன் விராட் கோலிக்கு எதிராக பேசிய நிலையில் அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

17 வயதில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வீரரும், விக்கெட் கீப்பருமான பார்த்தீவ் பட்டேல் அறிமுகமானார். ஆனால் இவருக்கு பின்னால் அறிமுகமான தோனியின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணியில் இவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. ஐபிஎல் போட்டியில் சென்னை, மும்பை உள்ளிட்ட 6 அணிகளில் இருந்த இவர், சென்னை 2010-லும், மும்பை 2015 மற்றும் 2017-ல் கோப்பைகளை கைப்பற்றியபோது அந்த அணியில்,

இந்த ஆண்டு கேப்டன் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் இருந்தபோதும் ஓர் ஆட்டத்திலும் விளையாட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கடந்த புதன்கிழமை அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இவர் ஓய்வு பெற்ற 24 மணி நேரத்தில் ரோகித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

‘ரோகித் சர்மா மிகவும் சிறந்த கேப்டன். ஒரு அணியை எப்படி உருவாக்க வேண்டும் என்று அவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு கேப்டன்சியை கொடுக்க வேண்டும். அவர் கேப்டன் ஆவதில் எந்த தவறும் இல்லை’ என்று விராட் கோலிக்கு எதிராக கருத்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இவர் ரோகித் மற்றும் விராட் கோலி குறித்து பேசிய சில மணிநேரங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியின் "டேலண்ட் ஸ்கவுட்டாக" (talent scout) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மும்பை இந்தியன்ஸ் அணியில், டேலண்ட் ஸ்கவுட்டாக இருப்பவர்கள், இந்தியா முழுவதும் நடக்கும் போட்டிகளை, நேரில் பார்த்துத் தங்கள் அணிக்கு விளையாடத் திறமையான வீரர்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி மும்பை இந்தியன்ஸ் அணியில், டேலண்ட் ஸ்கவுட்டாக இருந்த, நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஜான் ரைட் தான், பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணிக்குத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்