இதுவரைக்கும் நிறைவேறாத அந்த ஒரு 'விஷயம்'.. "'கோலி'க்கு இத விட ஒரு 'சூப்பர்' சான்ஸ் நிச்சயம் கெடைக்காது.." சாதித்துக் காட்டுவாரா 'கேப்டன்'?!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் மோதவுள்ள நிலையில், இதற்காக இரு அணிகளும் தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது.

இங்கிலாந்தின் சவுதாம்ப்டன் மைதானத்தில், இம்மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இந்த இறுதி போட்டி நடைபெறவுள்ள நிலையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை என்பதால், எந்த அணி கோப்பையைக் கைப்பற்றும் என்பதில் தற்போதே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி (Virat Kohli) தான் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.

இந்திய அணியின் சிறந்த கேப்டனாக வலம் வரும் கோலி, தனது அணிக்காக பல தொடர்களை வென்று கொடுத்து அசத்தியுள்ளார். ஆனாலும், அவரது தலைமையில் இந்திய அணி இதுவரை ஒரு ஐசிசி கோப்பையைக் கூட கைப்பற்றியதில்லை. 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி இறுதி போட்டி வரை முன்னேறியிருந்தது. அதே போல, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலக கோப்பை போட்டியில், அரை இறுதி வரை முன்னேறியிருந்தது.

இந்த இரண்டு தொடரிலும், இந்திய அணியை கோலி தான் வழி நடத்தியிருந்தார். அப்படி ஒரு சூழ்நிலையில், இந்த டெஸ்ட் கோப்பையை கோலி தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்துமா என்ற எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் உள்ளனர்.


இது பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் பார்த்தீவ் படேல் (Parthiv Patel), 'டெஸ்ட் போட்டி என்பது கிரிக்கெட்டின் மிகச் சிறந்த வடிவம். இதில், அனைவரும் டெஸ்ட் வீரர்களாக விரும்புகிறார்கள். இப்போது அந்த வடிவில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரும் வந்துள்ளது. ஐசிசி கோப்பையை இதுவரை கைப்பற்றிடாத கோலிக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. இதை மட்டும் கோலி வென்று காட்டி விட்டால், அவரது கேப்டன்சியில் மிக முக்கிய மைல்கல்லாக இது பார்க்கப்படும்.

முதல் ஆளாக ,சாதனை செய்யும் போது, அதனை மிகவும் ஸ்பெஷலாக அனைவரும் நினைவு வைத்திருப்பார்கள். அந்த வகையில், முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையைக் கோலி கைப்பற்றியாக வேண்டும்.

தொடரின் பாதியில், பல்வேறு விதிமுறைகள் மாற்றப்பட்டன. புள்ளி விதிகங்கள் மாற்றப்பட்டது. எனினும், இந்திய அணி இறுதி போட்டி வரை முன்னேறி அசத்தியுள்ளது. இதனால், கோப்பையை வெல்லும் பணியை கோலி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்' என பார்த்தீவ் படேல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்