‘அப்பா பிசினஸ் லாஸ்’!.. ‘ஹர்திக் அப்போ சின்ன பையன்’.. க்ருணால் கண்ணீருக்கு பின் இருக்கும் யாரும் அறியாத சோகக்கதை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிறுவயதில் க்ருணால் பாண்ட்யா எப்படி கஷ்டப்பட்டார் என அவரது பயிற்சியாளர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவின் அண்ணன் க்ருணால் பாண்ட்யா அறிமுக வீரராக களமிறக்கப்பட்டார். போட்டி ஆரம்பிக்கும் முன்னர், தனது சகோதரர் ஹர்திக் பாண்ட்யாவிடம் இருந்து இந்திய அணியின் தொப்பியை வாங்கியதும் க்ருணால் பாண்ட்யா கண் கலங்கினார்.
இதனை அடுத்து நடைபெற்ற போட்டியில் 31 பந்துகளில் 58 ரன்கள் அடித்து க்ருணால் பாண்ட்யா அசத்தினார். அறிமுகமான முதல் போட்டியிலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதனைத் தொடர்ந்து போட்டி முடிந்த பின் அவரிடம் பேட்டி காணப்பட்டது. அப்போது மறைந்த தனது தந்தையை நினைத்து கண்ணீர் சிந்திய க்ருணால் பாண்ட்யா, இந்த அரைசதத்தை தன் தந்தை சமர்பிப்பதாக கூறினார்.
இந்த நிலையில் சிறுவயதில் பாண்ட்யா சகோதரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்த பயிற்சியாளர் ஜிதேந்திரா, க்ருணால் பாண்ட்யாவின் இளமை காலம் எவ்வாறு இருந்தது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து Indian Express சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘க்ருணால் பாண்ட்யாவின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யாவுக்கு பிசினஸில் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இதனால் முதல்முறையாக ஹிமான்ஷு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான் க்ருணால் பாண்டாவின் கனவாக இருந்தது. அப்போது ஹர்திக் சின்ன பையன். க்ருணால் மூத்த பையனாக இருந்ததால் குடும்ப சுமையை ஏற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. குடும்பத்தில் வருமானம் இல்லாமல் தவித்த, க்ருணால் பாண்ட்யாவால் பயிற்சியில் கவனம் செலுத்த முடியவில்லை. அதிலிருந்து அவருக்கு சரிவு ஏற்பட்டது. நான் பெரிய பையனாக வளர்ந்ததும் வழக்கமான வேலைக்குதான் செல்வேனோ? என கவலை பட்டுக்கொண்டிருந்தார்’ என பயிற்சியாளர் ஜிதேந்திரா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பயிற்சியாளர் ஜிதேந்திரா, ‘உண்மையை சொல்லுங்க, க்ருணால் கண்டிப்பாக இந்திய அணிக்காக விளையாடுவானா? என அவரது தந்தை என்னிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பார். க்ருணால் எப்படியாவது இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதே அவரது கனவாகவும், கவலையாகவும் இருந்தது. அதுதான் தனது அறிமுக போட்டியில் க்ருணால் கண் கலங்க காரணம்’ என தெரிவித்தார். பாண்ட்யா சகோதரர்களின் தந்தை ஹிமான்ஷு பாண்ட்யா கடந்த ஜனவரி மாதம் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்துக்கு ஆட்டம் காட்டிய ‘புதுப்புயல்’!.. இவர் யாரோட ‘மாணவர்’ தெரியுமா..? அதனாலதான் பந்து சும்மா பறக்குதுபோல..!
- 'அட ஏங்க டென்சன் ஆகுறீங்க... ஒவ்வொரு இடத்துக்கும் 3 பேரு வச்சிருக்கோம்'!.. கேப்டன் கோலி கொடுத்த clue!.. வாயடைத்துப் போன விமர்சகர்கள்!!
- ‘கிரிக்கெட் மேல அவ்ளோ லவ்’!.. இந்தியா மேட்சை பார்க்க ‘மலை’ உச்சிக்கு ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்..!
- ‘மகனே, உன் நேரம் ஸ்டார்ட் ஆகிடுச்சு’!.. முன்பே கணித்த பாண்ட்யாவின் தந்தை.. வெளியான உருக்கமான தகவல்..!
- 'ஏற்கெனவே நெலம ரொம்ப மோசமா இருக்கு... இப்போ இது வேறயா?.. சோலி முடிஞ்ச்... இந்திய அணி காட்டுல மழை தான்'!
- 'இது இந்திய அணி இல்ல... விக்ரமன் சார் படம்'!.. குருணால் சாதனையின் போது ஹர்திக் செஞ்சத பார்த்து... மனதை உருக்கும் பின்னணி!
- 'என்னங்க சொல்றீங்க...' அடுத்த 2 மேட்ச்ல 'அவரு' இல்லையா...? 'இளம் வீரருக்கு காத்திருக்கும் வாய்ப்பு...' - அப்படின்னா ஐபிஎல் மேட்ச்ல 'அந்த' டீம் கேப்டன் யாரு...?
- ‘போட்டி ஆரம்பிச்சு 16 பால் தான் முடிஞ்சிருக்கு’!.. ‘அதுக்குள்ள இது எப்படி நடந்திருக்கும்?’.. இது என்னடா புது சர்ச்சையா இருக்கு..!
- என்னங்க ரூல்ஸ் 'இது'... ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நியாயமா...? - இந்திய கிரிக்கெட் அணியை விளாசி தள்ளிய சேவாக்...!
- ‘அப்பா, உங்களை பெருமைப்பட வச்சிட்டேன்’!.. மேட்ச் ஜெயிச்சதும் ‘க்ருணால் பாண்ட்யா’ போட்ட உருக்கமான பதிவு..!