பெஷாவர் குண்டு வெடிப்பு: ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடக்குமா? முழு பின்னணி தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷ்வரில் உள்ள ஷியா முஸ்லிம் மசூதிக்குள் இன்று வெள்ளிக்கிழமை நடந்த தற்கொலை வெடி குண்டு தாக்குதலில் 56 வழிபாட்டாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 194 பேர் காயமடைந்தனர்.

Advertising
>
Advertising

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மசூதியில் நிகழ்த்தப்பட்டுள்ள இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ராவல்பிண்டி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று வெள்ளிக்கிழமை தொடங்கியது. ராவல்பிண்டியில் இருந்து 187 கிமீ தொலைவில் உள்ள பெஷாவரில் குண்டுவெடிப்பு நடந்ததைத் தொடர்ந்து கிரிக்கெட் ஆஸ்திரேலியா பாகிஸ்தானின் நிலைமையை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. 

கிரிக்கெட் ஆஸ்திரேலியா நிலைமையை கண்காணித்து, இந்த குண்டுவெடிப்பு சுற்றுப்பயணத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், ஆஸ்திரேலிய அணி பெஷாவரில் ஒரு போட்டியில் கூட விளையாட திட்டமிடப்படவில்லை, ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம் இந்நிகழ்வின் காரணமாக ஏதேனும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என ஆஸிதிரேலிய வட்டாரங்கள் கூறுகின்றன.

பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் பாகிஸ்தான் பயணம், பாகிஸ்தான் நாட்டில் 24 ஆண்டுகளாக விளையாடாமல் இருந்ததை முடிவுக்குக் கொண்டு வந்தது. ஆஸ்திரேலியா கடைசியாக 1998 இல் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்தனர்.

இன்றைய முதல் டெஸ்ட் போட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, ஐ.சி.சி, கிரிக்கெட் ஆஸ்திரேலியா (சிஏ), பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஏசிஏ) ஆகியவை ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்த ஒரு கூட்டு செய்தியாளர் சந்திப்பை நடத்தின.

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பாட் கம்மின்ஸ் பாகிஸ்தான் நாட்டிற்கு வந்தவுடன் நம்ப முடியாத அளவிற்கு பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆஸ்திரேலிய அணிக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) அவர்களின் ஏற்பாடுகளை பாராட்டுவதாகவும் கூறினார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் 245/1 என ரன்களை குவித்து வலுவான நிலையில் உள்ளது. அசார் அலி (64*) உடன் தொடக்க ஆட்டக்காரர் இமாம்-உல்-ஹக் ஆட்டமிழக்காமல் 132 ரன்கள் எடுத்துள்ளார்.

PAKISTAN, PAKVAUS, PAT CUMMINS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்