'எதுக்கு எடுத்தீங்க'?... 'இப்போ ஏன் நீக்குறீங்க'?...'உலககோப்பை'யிலிருந்து நீக்கம்...'கொதித்த வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பைக்கான அணியிலிருந்து தான் நீக்கப்பட்டதால்,அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர் ஜூனைத் கான் வெளியிட்ட புகைப்படம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகக்கோப்பை போட்டிகள் தொடங்க இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், போட்டியில் பங்கேற்கும் நாடுகள் கிட்டத்தட்ட தங்கள் அணி வீரர்களை இறுதி செய்து விட்டன.இருப்பினும் வீரர்களின் பட்டியலில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய விரும்பினால்,23-ம் தேதிக்குள் மாற்றங்கள் செய்து,இறுதி பட்டியலை ஐசிசியிடம் சமர்பிக்க வேண்டும்.இதையடுத்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தங்கள் அணி வீரர்களின் பட்டியலில் சில மாற்றங்களை செய்துள்ளது.

தற்போது இங்கிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வரும் பாகிஸ்தான் அணி,0-4 என்ற கணக்கில் கோப்பையை இழந்தது.இதனால் உலககோப்பைக்கு செல்லும் பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது.அந்தவகையில் 33 வயது இடது கை வேகப்பந்து வீச்சாளர்கள் வஹாப் ரியாஸ், முகமது ஆமிர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆசிப் அலி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேர்க்கப்பட்டதால், உத்தேச அணியில் இடம் பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கான், ஆல்-ரவுண்டர் பஹீம் அஷ்ரப், அபித் அலி நீக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் தேர்வு குழு செய்த மாற்றம் வேகப்பந்து வீச்சாளர் ஜூனைத் கானை கடுமையாக கோபமடைய செய்துள்ளது.இதையடுத்து தனது எதிர்ப்பை வெளிக்காட்டும் விதமாக,தனது வாயை பிளாஸ்திரியால் ஒட்டி, புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.அதில், ’’நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. உண்மை எப்போதும் கசக்கும்’’ என்று கூறியுள்ளார்.இதற்கு பல ரசிகர்கள் எதிர்த்தும், ஆதரித்தும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.இதனால் ஜூனைத் கான் தான் பதிவிட்ட ட்விட்டர் பதிவை நீக்கியுள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, ICC, WORLDCUPINENGLAND, PAKISTAN, JUNAID KHAN, PCB, SACH KARWA HOTA HAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்