"'தயவு' செஞ்சு 'கோலி'ய எங்க 'டீம்'க்கு குடுத்துடுங்க.." ஆசையாக கேட்ட பாகிஸ்தான் 'ரசிகை'.. 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த 'சுவாரஸ்ய' சம்பவம்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரையில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டிகள் என்றால், நிச்சயம் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது.

இரு அணிகளுக்கும் இடையேயான போட்டிகள், சமீப காலமாக நடைபெறவில்லை என்றாலும், இந்த போட்டிக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் பட்டாளம், இரு நாடுகளிலும் ஏராளம். அது மட்டுமில்லாமல், இந்திய வீரர்களுக்கு பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்தியாவிலும் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.

அப்படி இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, தீவிர பக்தை ஒருவர் பாகிஸ்தானில் உள்ளார். பாகிஸ்தானின் கராச்சியைச் சேர்ந்த ரிஸ்லா ரெஹான் (Rizla Rehan) என்பவர், கடந்த 2018 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியைக் காண வந்தார். அப்போது கேமராவில் இவரது முகம் அதிகம் பட, அடுத்த சில நாட்களுக்கு இணையதளங்களில் வைரலானார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு உலக கோப்பைத் தொடரின் அரை இறுதியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய போட்டியில், இந்திய அணியை ஆதரிப்பதற்காக மான்செஸ்டர் மைதானத்திற்கு ரிஸ்லா வந்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருந்தது.

மேலும், இந்த போட்டியில் ரிஸ்லா மீண்டும் மைதானம் வந்த காரணத்தினால், ஒரு ஆண்டுக்கு பிறகு, நெட்டிசன்கள் மத்தியில் மீண்டும் அவர் வைரலானார். இந்த போட்டிக்கு பின்பு ரிஸ்லா அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசிய போது, பாகிஸ்தான் அரை இறுதி போட்டிக்கு வரும் என்ற நம்பிக்கையில் முன் கூட்டியே டிக்கெட்டுகள் வாங்கியதாகவும், பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் என நினைத்த போது, அது நடக்காமல் போனது என்றும் ரிஸ்லா தெரிவித்திருந்தார்.

அதே போல, இந்திய கிரிக்கெட் அணியிடமிருந்து பாகிஸ்தானிற்கு பரிசு ஒன்று வேண்டுமென்றால் நீங்கள் எதனைக் கேட்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ரிஸ்லா, 'எங்களுக்கு விராட் கோலி வேண்டும். தயவு செய்து எங்களுக்கு அவரைக் கொடுத்து விடுங்கள்' என அவர் கூறியிருந்தது, இரு அணி கிரிக்கெட் ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது, ரிஸ்லா ரெஹான் பற்றிய பதிவுகள், மீண்டும் நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்