ஒரு ஓவருக்கு 7 பந்தா?.. இந்தியா - பாகிஸ்தான் மகளிர் உலகக்கோப்பை போட்டியில நடந்த சர்ச்சை சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை ஒருவர் ஒரே ஊரில் ஏழு பந்துகளை வீசியது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது.

Advertising
>
Advertising

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | ரூ. 247 கோடியை நன்கொடையா கொடுத்துட்டு பெயரை கூட சொல்லாம போன மர்ம மனிதர்.. திகைச்சுப்போன அதிகாரிகள்..!

எட்டாவது மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. 26 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. பி பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் மற்றும் அயர்லாந்து இடம்பெற்றுள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

இந்த தொடரின் லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இதனை அடுத்து சேசிங்கில் இறங்கிய இந்திய மகளிர் அணி அபாரமாக விளையாடி 19 ஓவர்களில் போட்டியை வென்றது. இந்திய அணியின் ஜெமிமோ ரோட்ரிகஸ் அதிரடியாக விளையாடி 53 ரன்கள் எடுத்தார். இதன் பலனாக 19 ஓவர்களில் இந்தியா வெற்றி இலக்கை எட்டி இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

Images are subject to © copyright to their respective owners.

இந்த போட்டியில் வித்தியாசமான சம்பவம் ஒன்றும் நடைபெற்றிருக்கிறது. அதாவது கிரிக்கெட்டில் ஓவருக்கு ஆறு பந்துகள் மட்டுமே வீசப்படும். ஆனால் பாகிஸ்தான் வீராங்கனை நிடா தார் ஒரு ஓவரில் ஏழு பந்துகளை வீசி இருக்கிறார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தியா பேட்டிங் செய்தபோது ஏழாவது ஓவரை தார் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன் கொடுக்க,  அடுத்த பந்தில் தார் ரன் எதையும் கொடுக்கவில்லை. தொடர்ந்து மூன்று மற்றும் நான்காவது பந்துகளில் தலா ஒரு ரன்களை வழங்கிய தார், ஐந்தாவது பந்தில் இரண்டு ரன்களையும் ஆறாவது பந்தில் ஒரு ரன்னையும் வழங்கி இருந்தார். அத்துடன் ஓவர் முடிந்த நிலையில் ஏழாவது பந்தையும் அவர் வீசினார். அந்தப் பந்தில் ஜெமிமோ ஒரு பவுண்டரி அடித்திருந்தார். இதனை நடுவர்கள் உட்பட யாரும் கவனிக்காதது குறித்து ரசிகர்கள் இணையதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Also Read | திடீர்னு ஓய்வை அறிவித்த பிரபல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

CRICKET, PAKISTAN SPINNER, NIDA DAR, PAKISTAN SPINNER NIDA DAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்