‘மோசமான சாதனையைப் பதிவு செய்த பாகிஸ்தான்..’ மே.இ.தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வி..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் மே.இ.தீவுகளுக்கு எதிராக விளையாடிய பாகிஸ்தான் படுதோல்வி அடைந்துள்ளது.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 21.4 ஒவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 106 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி எடுத்த இரண்டாவது குறைந்தபட்ச ரன் என்ற மோசமான சாதனையைப் பதிவு செய்துள்ளது. 1992ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக 74 ரன்கள் எடுத்ததே பாகிஸ்தானின் இதுவரையான குறைந்தபட்ச ரன் ஆகும். உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 1999ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 132 ரன்களும், 2007ஆம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக 132 ரன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்