ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பாக், வீரர்.. சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் தவறான முறையில் பந்துவீசியது கண்டறியப்பட்டதால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 
பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பாக், வீரர்.. சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை.. ஐசிசி எடுத்த அதிரடி முடிவு!
Advertising
>
Advertising

21 வயதாகும் முகமது ஹஸ்னைன் கரீபியன் பிரீமியர் லீக்கில் (சிபிஎல்) மணிக்கு 155 கிமீ வேகத்தில் பந்து வீசினார்.  சிட்னி ஸ்டேடியத்தில் சிட்னி தண்டர் மற்றும் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் இடையேயான பிக் பாஷ் லீக் (பிபிஎல்) போட்டியில் பந்துவீசிய போது ஹஸ்னைன் தவறான முறையில் பந்து வீசுவதாக நடுவர் ஜெரார்ட் அபூட் அறிவித்தார்.  இதையடுத்து கடந்த ஜனவரி 19ம் தேதி ஆஸ்திரேலியாவில் ஹஸ்னைன் தனது பந்துவீச்சு சோதனைக்கு உட்படுத்தப்பட இருந்தார்.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாடுவதற்காக பாகிஸ்தானுக்கு திரும்ப வேண்டியிருந்ததால், லாகூரில் உள்ள ஐசிசியால் அங்கீகரிக்கப்பட்ட சோதனை மையத்தில் அவர் சோதனை செய்யப்படுவார் என முடிவு செய்யப்பட்து. இந்நிலையில்,  பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சோதனை ஆய்வகத்தால் ஹஸ்னைனின் பந்து வீச்சு முறையற்றது என கண்டறியப்பட்டுள்ளது. ஹஸ்னைன் டெலிவரி செய்யும்போது அவர் தன் கை முட்டியை மடக்கும்போது  15 டிகிரி வரம்பை மீறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

pakistan powler mohammad hasnain suspended from ICC Cricket

இதனைத்தொடர்ந்து, அவர் தன் பந்து வீச்சு முறையை திருத்திக் கொள்ள வேண்டும். பிசிபி தனது சொந்த பந்துவீச்சு நிபுணர்களுடன் இதுப் பற்றி விவாதித்ததுடன், சிக்கலைத் தீர்க்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. பிசிபி இப்போது ஒரு பந்துவீச்சு ஆலோசகரை நியமிக்கும், அவர் முகமது ஹஸ்னைனுடன் பணியாற்றுவார். இதனால் அவர் தனது பந்துவீச்சை சரிசெய்து மறுமதிப்பீட்டிற்கு தயாராக இருக்க முடியும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. முகமது ஹஸ்னைனுக்கு விதிக்கப்பட்ட தடையால் தடையால் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் குவெட்டா கிளாடியேட்டர்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

ஹஸ்னைன் பாகிஸ்தானுக்காக எட்டு ஒருநாள் மற்றும் 18 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தம் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அக்டோபர் 2019 இல், இலங்கைக்கு எதிராக T20 ஆட்டத்தில் ஹாட்ரிக் எடுத்த சாதனை இளம் வீரர் ஆவார்.

PAKISTAN POWLER MOHAMMAD HASNAIN, BANNED ICC CRICKET, AUSTRALIA, BBL, T20 MATCH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்