'முன்னாள் வீரரின் பேச்சைக் கேட்காத கேப்டன்'... விளாசிய ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணிக்கு எதிரானப் போட்டியில், பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்ததையடுத்து, அந்நாட்டு அணியின் கேப்டனை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
உலகக் கோப்பை தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில், இந்திய அணி அபார வெற்றிபெற்றது. இந்தப் போட்டிக்கு முன் பாகிஸ்தான் பிரதமரும், உலகக் கோப்பையை வென்ற முன்னாள் கிரிக்கெட் கேப்டனுமான இம்ரான்கான், ட்விட்டரில் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை கூறியிருந்தார்.
அதில், கிரிக்கெட் போட்டியில் முக்கிய பங்கு வகிப்பது மன வலிமைதான். இந்திய அணிக்கு எதிரானப் போட்டியில் பயமின்றி விளையாடுமாறும், பாகிஸ்தான் அணியை அவர் வலியுறுத்தியிருந்தார். நாங்கள் தைரியமான கேப்டனையே கொண்டிருக்கிறோம். 1992-ம் ஆண்டு இறுதிப் போட்டியில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்து வெற்றிக்கெண்டது.
அதேபோல், போட்டிக்கு முன் மழையால் பிட்சில் ஈரப்பதம் இல்லாதநிலையில், பாகிஸ்தான் அணி டாஸ் வென்றால், பேட்டிங் தேர்வு செய்ய வேண்டும் எனக் கூறி இருந்தார். ஆனால் டாஸ் வென்றதும், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால்தான் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்ததாக அந்நாட்டு ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'நாங்க போட்ட 'பிளான்' எல்லாம் போச்சே'... 'இந்த ஆளு' ...'சல்லி சல்லியா' நொறுக்கிட்டாரே' !
- ‘சேட்ட புடுச்ச பைய சார் நம்ம கோலி’.. யாரை இப்டி கிண்டல் பண்றாரு?.. வைரலாகும் வீடியோ!
- ‘என்னடா கொட்டாவி எல்லாம் விட்றீங்க’.. வச்சி செய்யும் நெட்டிசன்கள்!
- ‘வீசிய முதல் பந்திலேயே உலகசாதனை’.. மரண வெய்ட் காட்டிய விஜய் சங்கர்!
- “இந்தியாவா, பாகிஸ்தானா எது சிறந்த அணி?” வைரலாகும் பாகிஸ்தான் பாட்டியின் பதில்..
- ‘திடீரென ஏற்பட்ட காயம்’.. பாதியிலேயே வெளியேறிய இந்திய அணியின் முக்கிய வீரர்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
- ‘கொஞ்சம் கவணமா இருந்திருக்கலாம் கோலி’.. ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!
- மழையால் இந்தியாவுக்கு பாதிப்பா?.. மீண்டும் ஆட்டம் காட்டிய மழை!
- ‘அதிவேக சதம், தோனியின் சாதனையை முறியடிப்பு’.. ஒரே போட்டியில் மாஸ் காட்டிய ‘ஹிட்மேன்’!
- ‘கெடச்ச ஒரு சான்ஸ்யையும் மிஸ் பண்ணிடீங்க ’.. ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு ஆட்டம் காட்டிய இந்தியா!