"தோனி-ய பக்கத்துல பாக்குறப்போ கனவு மாதிரி இருந்துச்சு.." மெய்சிலிர்த்து போன பாகிஸ்தான் வீரர்.. பின்னணி என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணி கண்ட தலைச் சிறந்த கேப்டன்களில் ஒருவர் எம்.எஸ். தோனி. இவரது தலைமையில் ஆடிய இந்திய அணி, டி 20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பை உள்ளிட்ட பல கோப்பைகளை கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.

Advertising
>
Advertising

"கொஞ்சம் பொறுங்க பா.. இப்பவே அவர பாராட்டாதீங்க.." இந்திய வீரர் பற்றி சூசகமாக சொன்ன சுனில் கவாஸ்கர்

சர்வதேச போட்டியில் இருந்து தோனி ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக களமிறங்கி, தலைமையும் தாங்கி வருகிறார்.

இளம் வீரர்களை அவர் வழிநடத்தும் விதமும், எதிரணியினரின் விக்கெட்டுகளை வீழ்த்த தோனி போடும் திட்டங்களும் பல முறை அவரின் அணிக்கு கை கொடுத்துள்ளது.

இளம் வீரர்கள்

கடந்த ஆண்டு நடைபெற்றிருந்த ஐபிஎல் தொடரில், எதிரணியில் ஆடும் இளம் வீரர்கள் அதிகம் பேர், போட்டி முடிவடைந்த பின்னர், தோனியுடன் மணிக்கணக்கில் உரையாடிக் கொள்வார்கள். சமீபத்தில், நடந்து முடிந்த ஐபிஎல் ஏலத்திற்கு முன்பு கூட, சில இளம் வீரர்கள், தோனி தலைமையில் சென்னை அணிக்காக ஆட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.

டி 20 உலக கோப்பை

இந்திய அளவில் மட்டுமில்லாமல், வேறு நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களும், தோனியின் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 23 வயதே ஆகும் இளம் வீரர் ஷாநவாஸ் தஹானி, மிகத் தீவிரமான தோனி ரசிகர். கடந்த ஆண்டு, நடைபெற்றிருந்த டி 20 உலக கோப்பை போட்டியில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன.

தோனியுடன் ஃபோட்டோ

அப்போது, இந்திய அணியின் ஆலோசகராக இருந்த தோனியுடன், ஷாநவாஸ் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது பற்றி, தற்போது அவர் சில வார்த்தைகளை மனம் திறந்துள்ளார். தோனியுடனான சந்திப்பு பற்றி பேசிய ஷாநவாஸ், 'மகேந்திர சிங் தோனியின் லெவலை பற்றி பேச வேண்டும் என்றால், நான் நீண்ட நேரம் எடுத்து கொள்வேன். அவரை நேரில் சந்தித்தது, என்னுடைய கனவு நிஜமான தருணமாகும். அந்த தருணத்தை ஒரு போதும் நான் மறக்க மாட்டேன். அவருடைய வார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

அர்ப்பணிப்புடன் ஆடு

எனது வாழ்க்கையைப் பற்றியும், வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பது பற்றியும், பெரியவர்களை மதிப்பது பற்றயும் என்னிடம் அவர் பேசினார். "கிரிக்கெட் போட்டி என எடுத்துக் கொண்டால், அதில் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும். ஆனால், அதை எல்லாம் ஏற்றுக் கொண்டு, நீ விரும்பும் கிரிக்கெட்டிற்காக அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும்" என தோனி எனக்கு அறிவுரை வழங்கினார்' என நெகிழ்ச்சியுடன் ஷாநவாஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

முன்னாள் இந்திய கேப்டன் தோனி குறித்து, பாகிஸ்தான் வீரர் உணர்ச்சி பொங்க கருத்து தெரிவித்துள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் இதனை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

பொது வெளியில் போட்டு உடைத்த 'சஹா'.. பிசிசிஐ எடுக்க போகும் நடவடிக்கை?.. பரபரப்பை ஏற்படுத்தும் 'பின்னணி'

PAKISTAN PLAYER, MS DHONI, இந்திய அணி, எம்.எஸ். தோனி, டி 20 உலக கோப்பை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்