கட்டியணைக்க வந்த வீரருக்கு கன்னத்தில் விழுந்த அறை..பாகிஸ்தான் வீரரின் பளார் கோபம்.. வைரல் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் சக வீரரை கன்னத்தில் அறைந்து இருக்கிறார் வேகப்பந்து வீச்சாளரான ஹாரிஸ் ராஃப். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

சுரங்கத்துல வாக் போனப்போ.. செங்கல் சூலை வியாபாரிக்கு கிடைத்த பொக்கிஷம்.. மனுஷன் இப்போ கோடீஸ்வரன்..!

மேட்ச் டை

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் பெஷாவர் ஜால்மி மற்றும் லாகூர் காலண்டர்ஸ் அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற பெஷாவர் ஜால்மி அணியின் கேப்டன் வஹாப் ரியாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பெஷாவர் அணி 20 ஓவரில் 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய லாகூர் அணியும் 20 ஓவரில் சரியாக 158 ரன்கள் அடிக்க, ஆட்டம் டை ஆனது.

சூப்பர் ஓவர்

சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் அணி சூப்பர் ஓவரில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய பெஷாவர் அணி முதல் இரண்டு பந்துகளிலேயே வெற்றியை பெற்றது.

தவற விட்ட கேட்ச்

இந்த போட்டியில் பெஷாவர் அணி முதலில் பேட்டிங் செய்தபோது லாகூர் அணி சார்பில் 2வது ஓவரை வீசினார் ஹாரிஸ் ராஃப். அந்த ஓவரின் 5வது பந்தில் முகமது ஹாரிசின் விக்கெட்டை வீழ்த்தினார் ராஃப். அதே ஓவரில் ஹாரிஸ் ராஃபின் பவுலிங்கில் ஹஸ்ரதுல்லா சேஸாயின் கேட்ச்சை காம்ரான் குலாம் தவறவிட்டார்.

கன்னத்தில் விழுந்த அறை

இதனால்  கடுப்பானா ஹாரிஸ்,  முகமது ஹாரிசின் விக்கெட்டை வீழ்த்திய பிறகு வீரர்கள் ஒன்றுகூடி ஹாரிஸை கட்டியணைத்து பாராட்டினர். அப்போது அருகில் வந்த காம்ரானை கன்னத்தில் அறைந்தார் ஹாரிஸ் ராஃப். . ஆனால் காம்ரான் குலாம் அதை சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் அவரை கட்டிப்பிடித்து, அதை ஜாலியாக எடுத்துக்கொண்டார்.

ஆனால், இந்த சம்பவம் கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

CRICKET, PAKISTAN PLAYER, PACER HARIS RAUF, SLAP, TEAMMATE, PSL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்