‘திடீர் ஓய்வு முடிவை அறிவித்த இளம் வீரர்’... ‘வறுத்தெடுத்த முன்னாள் வீரர்கள்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெஸ்ட் போட்டிகளில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்த முகமது அமீரின் முடிவை, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 27 வயதில் உச்சக்கட்ட பார்மில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்தபோது, முன்னாள் வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் வீரரான சோயிப் அக்தர், ‘முகமது அமீர், அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் உச்சக்கட்டத்தில் இருக்கும்போது ஓய்வு முடிவை அறிவித்திருப்பது முற்றிலும் ஏமாற்றமாக உள்ளது.

இந்த நேரம் பாகிஸ்தான் அணிக்கு அமீர் திரும்ப செலுத்த வேண்டிய நேரம். தற்போது பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் மோசமாக சென்று கொண்டிருக்கிறது. அமீர் சிறப்பாக பந்து வீசி அணிக்கு மிகப்பெரிய வெற்றிகளை தேடிக்கொடுக்க வேண்டிய அவசியம் இருந்தது. நான் காயத்தில் இருந்தபோதிலும் கூட பாகிஸ்தான் அணி இங்கிலாந்திலும், நியூசிலாந்திலும் தொடரை கைப்பற்ற உதவியாக இருந்தேன்’ என்று கூறியுள்ளார்.

இதேபோல், முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், ‘முகமது அமீரின் இந்த முடிவு ஆச்சரியம் அளிக்கிறது. 27-28 வயதில் தான் ஒரு வீரர் தன் திறமையின் உச்ச நிலையை அடைவார். சிறந்த அணிகளுடனான உங்கள் திறமை டெஸ்ட் கிரிக்கெட்டில்தான் மதிப்பிடப்படும். பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் விளையாட உள்ள டெஸ்ட் போட்டிகளில், அமீரின் பந்துவீச்சு பாகிஸ்தானுக்கு தேவைப்படும்’ என்று கூறியுள்ளார்.

AMIR, PAKISTAN, PLAYERS, CRICKET

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்