“உலகத் தர ‘ப்ளேயர்’ங்க… உள்ளுக்குள்ள ஏதாவது பிரச்னையா?”- நம்ம ஊர் வீரருக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சப்போர்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

“உலகத் தரம் வாய்ந்த ஒரு வீரரை இந்திய அணி ஏன் இத்தனைக் காலமாக ஆட்டங்களில் சேர்த்துக்கொள்ளவில்லை?” என இந்திய வீரர் அஸ்வினுக்காக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் பரிந்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

இந்தியா- நியூசிலாந்து போட்டியிடும் டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. முதல் போட்டி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜெய்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. பந்துவீச்சாளர்களைப் பொறுத்த வரையில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு முதல் போட்டியில் நல்ல பாராட்டுகள் கிடைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பின்னர் சுமார் 4 ஆண்டுகள் கழித்து கிரிக்கெட்டின் குறுகிய கால போட்டிகளில் விளையாடத் தொடங்கி உள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் மூலமாக அணியில் மீண்டும் இணைந்த அஸ்வின் நியூசிலாந்துக்கு எதிரான ஜெய்பூர் போட்டியில் தனக்கான இடத்தை நிலை நிறுத்தி உள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியிலேயே ஆடும் 11 வீரர்கள் அணிப் பட்டியலில் இடம் பிடித்த அஸ்வின் தனது அபார பந்துவீச்சால் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். நியூசிலாந்து அணியின் ரன் வேட்டையைக் கட்டுக்குள் வைக்க அஸ்வினின் பந்துவீச்சும் உதவியது என்றே கூறப்படுகிறது. இந்த சூழலில் ஜெய்பூரில் நடந்த முதல் போட்டியில் அஸ்வினின் அபார ஆட்டத்தைக் கண்ட பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சல்மான் பட், “இத்தனைக் காலம் இவரை ஏன் களத்தில் இறக்கவில்லை” எனக் கேட்டுள்ளார்.

மேலும் சல்மான் பட் கூறுகையில், “அஸ்வின் ஒரு உலகத் தரம் வாய்ந்த வீரர். அவரை கடந்த சில ஆண்டுகளாக அணிக்குள் இணைக்காமல் வைத்திருந்தது எனக்கு அர்த்தப்படவில்லை. இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடுகிறது என பார்த்த போது அந்த போட்டியில் அஸ்வினைக் காணவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் விளையாடிய போது தான் வீசிய 2 ஓவர்களில் மட்டும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் அஸ்வின். ஆனால், மீண்டும் அடுத்தடுத்து நடந்த பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் அஸ்வின் விளையாடவில்லை. ஒரு கட்டத்தில் அஸ்வின் களம் இறங்கி விளையாடும் போது அவருக்கும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களால் பார்க்க முடியும்.

சமீபத்திய நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அஸ்வினின் ஆட்ட முதிர்ச்சி வேற எல்லையில் இருந்தது. அவர் முழுமையான பந்துவீச்சாளர். அஸ்வினுக்கும் அணி நிர்வாகத்துக்கும் அல்லது கேப்டனுக்கும் அல்லது தேர்வாளர்களுக்கும் இடையே என்ன பிரச்னை என்று எனக்குத் தெரியவில்லை. டி20 உலகக்கோப்பையின் அத்தனைப் போட்டிகளிலும் அஸ்வின் விளையாடிருக்க வேண்டும்” எனப் பேசியுள்ளார்.

CRICKET, INDVSNZ, RASHWIN, TEAM INDIA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்