பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில்.. விராட் கோலி பேனர்.. "அதுல போட்டிருந்த அந்த ஒரு லைன் தான் ஹைலைட்டே"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த விராட் கோலி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருடன், அந்த பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.

Advertising
>
Advertising

திடீரென கோலி எடுத்த முடிவு, அவரது ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் மத்தியில், அதிகம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

பேட்டிங்கில் முன்பு போல ஒரு தாக்கத்தை கோலியால் ஏற்படுத்த முடியாத காரணத்தினால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டி, கோலி இந்த முடிவினை எடுத்திருப்பார் என்றும் கிரிக்கெட் நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

கோலி பேட்டிங்

கேப்டன் பதவியில் இருந்து முற்றிலும் விலகிய கோலி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில்  முதல் முறையாக களமிறங்கினார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில், இரண்டு போட்டிகளில்  அரை சதம் அடித்திருந்தார் கோலி. ஆனாலும், அதனை சதமாக மாற்ற முடியவில்லை. தொடர்ந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகளில் சேர்த்து, மொத்தம் 26 ரன்கள் மட்டுமே கோலி எடுத்திருந்தார்.

ரசிகர்கள் நம்பிக்கை

நட்சத்திர வீரரான கோலி, தொடர்ந்து பேட்டிங்கில் தடுமாற்றம் காண்பதை, முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம், நிச்சயம் அவர் பழைய கம்பேக் கொடுப்பார் என்றும் சிலர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இவை அனைத்தையும் விட, கோலி கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச போட்டியில் ஒரு சதம் கூட அடிக்கவில்லை.

ஒவ்வொரு போட்டி வரும் போதும், அவர் நிச்சயம் இந்த முறை சதமடித்து விடுவார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்து வருகின்றனர். அதே போல, கோலி தொடர்ந்து ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தினை அடித்து தான் அவுட்டாகி செல்கிறார். இதனையும், பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

கோலி பேனர்

இந்நிலையில், பாகிஸ்தானில் தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் போது, கோலி குறித்து ரசிகர் வைத்திருந்த பேனர், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரை போலவே, பாகிஸ்தானில் PSL லீக் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில், Multan Sultans மற்றும் Quetta Gladiators ஆகிய அணிகள் ஒரு போட்டியில் மோதின.

கோலியின் செஞ்சுரி

அப்போது போட்டியைக் காண வந்த ரசிகர் ஒருவர், கோலி தொடர்பான பேனர் ஒன்றினை வைத்திருந்தார். அதில் கோலியின் படத்துடன், 'உங்களது செஞ்சுரியை பாகிஸ்தானில் காண விரும்புகிறேன்' என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே, இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான தொடர்கள், சில காரணங்களுக்காக நடைபெறாமல் இருந்து வருகிறது. அத்தகைய சூழலில், பாகிஸ்தான் ரசிகரின் பேனர், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

VIRATKOHLI, PSL, CENTURY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்