முகமது ஷமியின் 'கர்மா' கமெண்ட்.. அக்தர் போட்ட ரிப்ளை.. ட்விட்டரில் வலுக்கும் விவாதம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர் போட்ட ட்வீட்டுக்கு இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி அளித்த பதில் ட்வீட் செய்திருந்த நிலையில், அதற்கு ரிப்ளை செய்திருக்கிறார் அக்தர். இந்த விவாதம் ட்விட்டர் பக்கத்தில் சூடுபிடித்திருக்கிறது.
Also Read | 2.5 வருஷத்துக்கு பிறகு தரையிறங்கிய ஆளில்லா விண்வெளி விமானம்.. வரலாற்றில் புதிய சாதனை.. முழு விபரம்..!
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த டி 20 உலக கோப்பை தொடரின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி அடைந்துள்ளது. முன்னதாக குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.
கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதனிடையே கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.
இதைத் தொடர்ந்து, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது இங்கிலாந்து. மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் பீல்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது இங்கிலாந்து அணி. துவக்க வீரர் ஹேல்ஸ் 1 ரனனில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால் அதன்பிறகு களத்திற்கு வந்த பென் ஸ்டோக்ஸ் நிலைத்து ஆடி, இங்கிலாந்தை வெற்றிபெற செய்தார். இதன்மூலம் உலகக்கோப்பையை வென்றது இங்கிலாந்து அணி.
பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவிய நிலையில் அந்த அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அக்தர், தனது டிவிட்டர் பக்கத்தில் "💔" என பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த இந்திய வீரர் ஷமி, மன்னிக்க சகோதரரே.. இதற்கு பெயர் தான் கர்மா" என பதில் ட்வீட் செய்யப்போக இந்த ட்வீட்கள் பெரும் வைரலாகின.
இந்நிலையில், ஷமியின் கமெண்ட்டிற்கு ரிப்ளை அளித்திருக்கிறார் அக்தர். முன்னதாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை பாராட்டியிருந்தார். அந்த புகைப்படத்தை பகிர்ந்து அக்தர்,"இதை விவேகமான ட்வீட் என்று அழைக்கலாம்" என கமெண்ட் செய்திருக்கிறார். இதுகுறித்து நெட்டிசன்களும் தங்களுடைய கருத்தை கமெண்டாக இந்த பதிவில் போட்டு வருகின்றனர்.
Also Read | 2 பெண்கள், 8 குழந்தைகளுடன்.. ஒரே வீட்டில் வாழும் நபர்.. அடுத்ததா போட்டுள்ள பிளான்.. வைரல் பின்னணி!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "இதுக்கு பேர் தான் கர்மா"..பாகிஸ்தான் தோல்விக்கு அக்தர் போட்ட எமோஜி.. இந்திய பவுலர் 'நச்' Reply!
- MS DHONI: இது தோனி லேட்டஸ்ட்.. "எங்கு தொடங்கும் எங்கு முடியும்".. வெந்து தணிந்தது காடு படத்தின் தீம் பாடலுடன் CSK நிர்வாகம் வெளியிட்ட வீடியோ!
- சைலண்டாக இருந்த ஆடியன்ஸ்.. சிக்னல் கொடுத்த ஹர்திக்.. அடுத்த பந்திலேயே நடந்த வைரல் சம்பவம்!!
- பறிபோன Finals வாய்ப்பு.. ஒரே ஒரு எமோஜி போட்டு KL ராகுல் பகிர்ந்த ஃபோட்டோ!!
- "போட்டோஷூட்ல ரோகித் ஷர்மாவும் உலக கோப்பை பக்கத்துல உட்கார்ந்துருக்கலாமோ..".. நெட்டிசன்கள் ஆதங்கம்
- "தோல்வி கூட வலிக்கல.. ஆனா".. உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா.. ஆனந்த் மஹிந்திராவின் அட்வைஸ் ட்வீட்..!
- கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!
- தோல்வி அடைந்த இந்திய அணி... Retirement குறித்து சுனில் கவாஸ்கர் சொன்ன பரபரப்பு கருத்து!!
- இந்தியாவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இங்கிலாந்து.. பாகிஸ்தான் பிரதமர் போட்ட பரபர ட்வீட்.. T20WC2022
- "இனி எந்த இந்திய கேப்டனும் பண்ண முடியாது".. தோல்விக்கு பின் கம்பீர் சொன்ன 'அதிரடி' கருத்து!!