‘குறுக்கு வழிய நம்பி எல்லாத்தையும் இழந்துட்டார்.. இந்த வலி, வேதனையெல்லாம்’ .. வீரரின் மனைவி உருக்கமான பதிவு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நசீர் ஜாம்ஷெட், யூசுப் அன்வர் மற்றும் முகமது இசாஜ் மூவரும் கடந்த 2018-ஆம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக கடந்த பிப்வரி மாதம் குற்றப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுள் நசீர் ஜாம்ஷெட்டின் வழக்கு மட்டும் கடந்த வெள்ளைக்கிழமை வரை விசாரிக்கப்பட்டு வந்தது. கடைசி விசாரணையின் முடிவில் இவருக்கு 17 மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நசீரின் மனைவி டாக்டர் சமரா அஃப்சல், தன்னுடைய வாழ்க்கையில் இது கடினமான காலம் என்றும் நசீரின் தவறில் இருந்து மற்ற வீரர்கள் கற்றுக்கொள்வார்கள் என்றும் உண்மையான உழைப்பை கொடுக்காமல் குறுக்கு வழியைத் தேர்வு செய்ததன் மூலம் நசீர் தன் எதிர்காலம், விளையாட்டு, அந்தஸ்து, மரியாதை, சுதந்திரம் என அனைத்தையும் இழந்துவிட்டார் என்று உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

மேலும், அந்த பதிவில்,  தான் அனுபவித்த வலி. வேதனை, அவமானம் உள்ளிட்டவற்றை எந்த குடும்பமும் அனுபவிக்கக் கூடாது என்றும், நாட்டுக்காக விளையாடுவதை பாக்கியமாகக் கருத வேண்டும் என்றும், நசீருக்கு நேர்ந்ததைப் பார்த்து மற்ற வீரர்கள் ஊழலைக் கைவிட வேண்டும் என்றும் கோரினார்

SAMARA AFZAL, NASIR JAMSHED, PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்