"போட்டோஷூட்ல ரோகித் ஷர்மாவும் உலக கோப்பை பக்கத்துல உட்கார்ந்துருக்கலாமோ..".. நெட்டிசன்கள் ஆதங்கம்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை தொடர் துவங்கும் முன் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்ட போட்டோ ஷூட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "தோல்வி கூட வலிக்கல.. ஆனா".. உலகக்கோப்பை வெற்றி வாய்ப்பை இழந்த இந்தியா.. ஆனந்த் மஹிந்திராவின் அட்வைஸ் ட்வீட்..!

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.

குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறின.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணியை  பாகிஸ்தான் அணி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து ஆடியது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி, நியுசிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில்  டாஸ் வென்று பேட்டிங் செய்த நியுசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவரில் வெற்றி இலக்கை 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து எட்டியது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி நியுசிலாந்து அணியை வென்றது. பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் விக்கெட்டுகள் எதையும் இழக்காமல், 16 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற உதவினர்.

இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவார்கள். இந்த இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டன.

தற்போது கிரிக்கெட் ரசிகர்கள், விமர்சகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் தோல்வி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இச்சூழலில் இந்த உலகக் கோப்பை போட்டி துவங்கும் முன் நடைபெற்ற போட்டோ ஷூட்டில் அணிகளின் கேப்டன்கள் கலந்து கொண்டனர். அப்போது மாதிரி உலகக்கோப்பையை மையமாக வைத்து போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. அதில் உலகக்கோப்பை அருகில் இங்கிலாந்து அணி கேப்டன் பட்லரும், பாகிஸ்தான் அணி கேப்டன் பாபரும் அமர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இந்த இரு அணிகளும் பைனலுக்கு வரும் என்பது அப்போதே குறியீடு மூலம் ஏதேச்சையாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்திய ரசிகர்கள் இந்த ஃபோட்டோஷூட்டின் போது ரோகித் ஷர்மா உலககோப்பை அருகில் அமர்ந்து இருந்தால் ஒரு வேளை இந்திய அணி பைனலுக்கு போயிருக்குமோ என ஆதங்கமாய் கூறி வருகின்றனர்.

Also Read | கை நழுவி போன உலக கோப்பை வாய்ப்பு.. வெளியேற பிறகு உருக்கத்துடன் விராட் பகிர்ந்த ட்வீட்!!

CRICKET, T20 WC, PAKISTAN ENGLAND TEAMS, PAKISTAN VS ENGLAND, T20 WC PHOTOSHOOT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்