'இந்திய டிரைவர் சொன்ன ஒரு வார்த்தை'...'விருந்து வைத்த பாகிஸ்தான் வீரர்கள்'...இதயங்களை வென்ற சம்பவம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் தோற்ற போதும், பாகிஸ்தான் வீரர்கள் செய்த செயல் பலரது இதயங்களை வென்றுள்ளது.

ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து போட்டி முடிந்து சில நாட்களுக்கு பிறகு யாஷிர் ஷா, நாசிம் கான் உள்ளிட்ட சில பாகிஸ்தான் வீரர்கள் இரவு உணவை அருந்துவதற்காக வெளியில் சென்றார்கள். அப்போது அங்கிருந்த டாக்ஸி ஒன்றை பிடித்து உணவகத்திற்கு சென்றார்கள்.

இதனிடையே இந்தியரான அந்த டாக்ஸி ஓட்டுநர் தனது டாக்ஸியில் வருவது பாகிஸ்தான் வீரர்கள் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்த பிறகு, பாகிஸ்தான் வீரர்களிடம்  பயணம் செய்ததற்கு பணம் ஏதும் வேண்டாம் என அன்பாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் வீரர்கள், இந்திய ஓட்டுனரின் அன்பை கண்டு நெகிழ்ந்து போனார்கள்.

உடனே அவரையும் உணவகத்துக்கு தங்களுடன் உடன் அழைத்துச் சென்ற வீரர்கள், அவருக்கு விருந்து வைத்து தங்களின் அன்பை பொழிந்துள்ளார்கள். இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து யாருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், போட்டியின்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சனிடம் இந்த தகவலை வர்ணனையாளர் அலிசன் தெரிவித்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து இந்த நெகிழ்ச்சி சம்பவம் பலருக்கும் தெரியவந்துள்ளது. தற்போது உணவகத்தில் டாக்ஸி ஓட்டுநரும் கிரிக்கெட் வீரர்களும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் வைரலாகி பரவி வருகின்றன. இந்திய, பாக் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி ஆஸ்திரேலிய ரசிகர்களும் பாக் வீரர்களுக்கும், டாக்ஸி ஓட்டுநருக்கும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

PAKISTAN, CRICKET, PAKISTAN CRICKETERS, INDIA CAB DRIVER, DINNER, ALISON MITCHELL, AUSTRALIA AND PAKISTAN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்