என்ன கேட்டா 'தாலிபான்கள்' ரொம்ப 'நேர்மையான' மனுஷங்கன்னு சொல்லுவேன்...! - 'மனசு' விட்டு பாராட்டிய முன்னாள் கிரிக்கெட் வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அமெரிக்கா தன் ராணுவ படையினரை முழுவதுமாக வெளியேற்றியுள்ளது.

கடைசி நாளான இன்றும் அமெரிக்க வீரர்கள்  சிலர் ஆப்கானில் இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், கடைசி வீரர் வெளியேறும் புகைப்படத்தை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை 20 வருடங்களாக மறைமுகமாக தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த அமெரிக்கா இன்று (31-08-2021) ஆப்கானை விட்டு முழுவதுமாக வெளியேறியுள்ளது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாமல் தன் சொந்த நாட்டு மக்களையே முழுவதுமாக மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிதி, நேற்று (30-08-2021) ​​தாலிபான்களை ஊக்குவிக்கும் விதமாக ஊடகங்களுக்கு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், 'தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை நேர்மறையான எண்ணத்துடன் கைப்பற்றினர். முன்பு போல் இல்லாமல் இப்போது பெண்கள் பணி செய்ய அவர்கள் அனுமதித்துள்ளனர்.

அதுமட்டுமில்லாமல், கிரிக்கெட் விளையாட்டையும், பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரையும் நடத்த தாலிபான் ஆதரவாக உள்ளது. தாலிபானுக்கும் அவர்களின் புதிய ஆட்சிக்கும் என் பாராட்டுக்கள்' என தெரிவித்துள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்