"ரொம்ப 'டார்ச்சர்' பண்றாங்க... இதுக்கு மேலயும் தாங்கிக்க முடியாது..." திடீரென 'ஓய்வு' முடிவை அறிவித்த 'பிரபல' கிரிக்கெட் 'வீரர்'... அதிர்ச்சியில் 'ரசிகர்கள்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான முகமது அமீர், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

28 வயதான முகமது அமீர், தற்போது இலங்கையில் நடைபெற்று வரும் லங்கன் பிரீமியர் லீக் தொடரில் ஆடி வருகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தான் ஓய்வு பெறப் போவது குறித்து அமீர் தெரிவித்துள்ளார்.

அதில், தான் அணி நிர்வாகத்தின் மூலம் மனரீதியாக சித்ரவதை செய்யப்பட்டதாகவும், இதனால் தற்போதுள்ள பாகிஸ்தான் அணியின் நிர்வாகத்தின் கீழ் தன்னால் விளையாட முடியாது என்றும், அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையிலுள்ள அமீர், விரைவில் பாகிஸ்தான் சென்றதும் தனது குடும்பத்தினரிடம் பேசிய பின், தான் ஓய்வு பெறப் போவதற்கான காரணம் குறித்து இன்னும் விரிவான அறிக்கை ஒன்றை வெளியிடுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணிகளில் உள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மிகச் சிறப்பாக பந்து வீசும் அமீரின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களை அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ள நிலையில், அவர் தெரிவித்துள்ள காரணமும் பாகிஸ்தான் அணி நிர்வாகத்திற்குள் நடப்பது என்ன என்பது குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. 

 

2009 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான முகமது அமீர், பாகிஸ்தான் அணி 2009 ஆம் ஆண்டு டி 20 உலக கோப்பை வென்ற அணியிலும், 2017 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற அணியிலும் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்