‘எனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் விராட் கோலி தான்’!.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ‘மனைவி’ அசத்தல் பதில்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் தனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன் என பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

‘எனக்கு பிடிச்ச பேட்ஸ்மேன் விராட் கோலி தான்’!.. பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரின் ‘மனைவி’ அசத்தல் பதில்..!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி. இவர் இந்தியாவைச் சேர்ந்த ஷாமியா அர்சோ என்பவரை கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஜாகீர் அப்பாஸ், மோஷின் கான், சோயிப் மாலிக் ஆகியோர் வரிசையில் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட நான்காவது பாகிஸ்தான் வீரர் ஹசன் அலிதான்.

Pakistan cricketer Hasan Ali wife big fan of Virat Kohli

ஹசன் அலியின் மனைவி ஷாமியா அர்சோ ஹரியானாவைச் சேர்ந்தவர். இவர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸில் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் இருவரும் துபாயில் திருமணம் செய்துகொண்டனர். அப்போது அவர்களது திருமண போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெட்டிசன்களின் கேள்விக்கு சமீபத்தில் ஷாமியா அர்சோ பதிலளித்து வந்தார். அப்போது நெட்டிசன் ஒருவர், ‘உங்களுக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி, ஆனால் பிடித்த பேட்ஸ்மேன் யார்?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தான் தனக்கு பிடித்த பேட்ஸ்மேன் என ஷாமியா அர்சே பதிலளித்தார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்