"என்னங்க 'டீம்' இது??... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லியா??..." 'ஐசிசி'க்கு எதிராக 'கேள்வி' எழுப்பிய 'ரசிகர்கள்'... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி கடந்த 10 ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட், ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 அணியை இன்று அறிவித்திருந்தது.

இதில் டெஸ்ட் அணியின் கேப்டனாக விராட் கோலி பெயர் இடம் பிடித்துள்ள நிலையில், டி 20 மற்றும் ஒரு நாள் போட்டியின் கனவு அணிக்கான கேப்டனாக தோனி உள்ளார். மூன்று பட்டியலிலும் இடம்பிடித்துள்ள ஒரே வீரர் விராட் கோலி தான்.

இந்நிலையில், ஐசிசியின் 10 ஆண்டுக்கான கனவு அணி குறித்த அறிவிப்பு பாகிஸ்தான் ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாக்கியுள்ளது. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, டி 20 என மூன்று அணிகளிலும் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல அணி வீரர்கள் இடம்பெற்றிருந்த போதும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒருவரின் பெயர் கூட இந்த பட்டியலில் இடம்பெறவில்லை. அது மட்டுமில்லாமல் மகளிருக்கான அணியிலும் ஒரு பாகிஸ்தான் வீராங்கனை பெயர் கூட இடம்பெறவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி பாபர் அசாம் உள்ளிட்ட பல சிறந்த வீரர்களை உருவாக்கியுள்ளது. பாபர் அசாம் சமீபத்தில் டி 20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தை கூட பிடித்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் கடும் ஆதிக்கம் செலுத்தியிருந்த பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் பெயர், உமர் குல், ஷாஹித் அப்ரிடி, சயீத் அஜ்மல் உள்ளிட்ட உலக தரம் வாய்ந்த பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் பெயர் என யார் பெயரும் இடம்பெறாமல் போனது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ரசிகர்களை கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கியுள்ளது. 









 

இதனால், பாகிஸ்தான் ரசிகர்கள் ட்விட்டரில் தங்களது கருத்துக்களை மிகவும் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர். ஐசிசியின் அறிவிப்பை எதிர்த்து ரசிகர்கள் குரல் கொடுத்து வருவது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்