'மொத்த சந்தோஷமும் போச்சு'...பிரபல 'கிரிக்கெட் வீரரின் மகள்' திடீர் மரணம்... அதிர்ச்சியில் வீரர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிரபல பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலியின் மகள் புற்று நோயால் மரணமடைந்திருப்பது கிரிக்கெட் வீரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஆசிஃப் அலி.இதுவரை பாகிஸ்தானுக்காக 16 போட்டிகளில் விளையாடியுள்ள அலி,342 ரன்கள் குவித்ததோடு 31.09 என்ற சராசரியையும் வைத்துள்ளார்.இதனிடையே பி.எஸ்.எல் தொடரின் 4வது சீசனில் விளையாடும் போது தான்,தனது மகளுக்கு புற்று நோய் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து தொடருக்காகப் புறப்படும் முன்பு ''என் மகள்,ஸ்டேஜ் 4 புற்று நோயுடன் போராடி வருகிறார்,அவருக்கு அமெரிக்காவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அழைத்து செல்கிறோம்.ஒரு மணி நேரத்தில் விசா கொடுத்த அமெரிக்க அதிகாரிகளுக்கு நன்றி” என தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அலியின் மகளான நூர் ஃபாத்திமா,சிகிச்சை பலனின்றி  மருத்துவமனையில் மரணமடைந்துள்ளார்.இது குறித்து, ஆசிஃப் அலி விளையாடும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் இஸ்லாமாபாத் யூனைடெட் அணி,அலியின் மகள் மரணம் குறித்து தனது இரங்கலை தெரிவித்துள்ளது.இதனிடையே மகளின் மரணம் ஆசிஃப் அலியை நிலைகுலைய செய்துள்ளது.

தன்னுடைய மொத்த சந்தோஷத்தையும் தான் இழந்து விட்டதாக ஆசிஃப் அலி தனது சக வீரர்களிடம் கதறி அழுதுள்ளார்.இந்நிலையில் நூர்ஃபாத்திமாவின் திடீர் மரணம் பாகிஸ்தான் வீரர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

CRICKET, PAKISTAN, ASIF ALI, CANCER TREATMENT, PAKISTAN CRICKETER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்