கிரிக்கெட்டில் அறிமுகமாகும் உலகின் உயரமான பவுலர்...! - 'அந்த' நாட்டுக்காக தான் விளையாட உள்ளார்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் அணியில் இடம்பெறும் 21 வயதுடைய 7 அடி சுழற்பந்துவீச்சாளர் தன்னுடைய உயரத்தால் சர்வதேச அணிகளையே அச்சுறுத்த போகிறார் என கணிக்கப்படுகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் லாகூர் குவாலண்டர்ஸ் அணியில் பயிற்சி எடுத்துவரும் 21 வயதான முடாசிர் குஜ்ஜார் தன்னுடைய உயரத்தால் உலகையே திரும்பிப்பார்க்க வைத்துள்ளார்.

7 அடி 6 அங்குல உயரம் உடைய முடாசிர் குஜ்ஜார் சுழற்பந்துவீச்சாளராகப் பயிற்சி எடுத்துவருவது சர்வதேச அணிகளுக்கு ஆறுதலாக உள்ளது எனலாம். லாகூர் நகரை சேர்ந்த முடாசிர் கிரிக்கெட் உலகில் உயரமான வீரராக மாறும் வாய்ப்பு உள்ளது. இதுவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்துவீச்சாளர் முகமது இர்பான் தான் கிரிக்கெட்டில் மிக உயரமான வீரர் எனவும் அவரது உயரம் 7.1 அடி என கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அதே பாகிஸ்தானை முடாசிரும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்தால், உயரமான வீரர் எனும் பெருமையைப் பெறுவார்.

முடாசிர் குஜ்ஜாரின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் இயல்பான உயரத்தில்தான் இருக்கிறார்கள் எனவும் முடாசிர் மட்டும் தனது ஹார்மோன் வளர்ச்சியால் உருவாகும் இயல்புக்கும் மேலான உயரத்தைப் பெற்றுள்ளார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறும் முடாசிரின், 'நான் இவ்வளவு  உயரமாக இருப்பதால் என்னுடைய பள்ளி, கல்லூரி காலங்களில் என்னை நிறைய பேர் கேலி செய்வர்களில். சாதாரண மனிதர்களைப்போல் என்னால் பேருந்து, சைக்கிள் ரிக்ஷாவில் செல்ல முடியாது. காரில் கூட செல்ல முடியாது. பைக் மட்டும் ஓரளவு சமாளித்து பைக் ஓட்டுவேன்.

அதுமட்டுமில்லை என்னுடைய கால் சைஸ்க்கு எங்கும் செருப்பு, ஷூ கிடைக்காது, நான் தனியாக ஆர்டர் கொடுத்துச் செய்கிறேன். எனது ஷூ வின் நீளம் 23 இன்ச், பேண்ட் உயரம் 54 செ.மீ.

என்னதான் சிரமம் இருந்தாலும் இந்த உயரம் எனக்கு இறைவன் அளித்தது. இந்த உயரத்தால் நான் ஓடுவதில் எந்தவிதமான சிரமமும் இல்லை. தற்போது லாகூர் குலாண்டர் அணியில் இணைந்து கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறேன். கூடிய சீக்கிரம் சர்வதேச கிரிக்கெட் உலகிற்கு வந்து, உலகிலேயே உயரமான கிரிக்கெட் வீரர் எனும் பெருமையைப் பெறுவேன்' எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்