"என்னங்க இதெல்லாம்??..." 'பொறாமை'யில் பொங்கிய 'பாகிஸ்தான்' வீரர்??... 'சர்ச்சை'யை ஏற்படுத்திய 'கமெண்ட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற முதல் டி 20 போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்ததால், சில முன்னாள் வீரர்கள் இந்திய அணியின் தோல்வியை விமர்சனம் செய்து வருகின்றனர்.

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் ஒருவரின் கருத்தும் தற்போது அதிகம் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையேயான முதல் டி 20 போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த ஸ்டேடியத்தில் இரு அணிகளுக்கு இடையேயான 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றிருந்தது.

உலகின் பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி மைதானத்தில், 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உட்கார முடியும் என்ற நிலையில், நேற்றைய டி 20 போட்டியைக் காண சுமார் 67,000 பேர் வந்திருந்தனர். இந்நிலையில், இஎஸ்பிஎன் க்ரிக்இன்போ (ESPN CricInfo), மைதானத்தில் ரசிகர்கள் இருக்கும் புகைப்படம் ஒன்றை தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, மொத்தம் 67,200 பார்வையாளர்கள் வந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தது.



 

இதற்கு கமெண்ட் செய்த பாகிஸ்தான் வீரர் அமீர் யாமின், 'கொரோனா எங்கே?' என கிண்டல் செய்து கமெண்ட் செய்திருந்தார். இது ரசிகர்கள் மத்தியில், கடுப்பைக் கிளப்பியுள்ளது. அமீர் யாமின், கடைசியாக ஆடி வந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடர், கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் நடைபெறாமல் போன பொறாமையில் தான், அமீர் யாமின் இப்படி கிண்டல் செய்துள்ளார் என ரசிகர்கள் அவரது கருத்திற்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர்.












பாகிஸ்தான் வீரரின் இந்த கிண்டல் கமெண்ட், தற்போது நெட்டிசன்களிடையே அதிகம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்