VIDEO: நேரம் பார்த்து நியூஸிலாந்தை ‘பழிவாங்கிய’ பாகிஸ்தான் ரசிகர்கள்.. ஜெயிச்சதும் எல்லாரும் சொன்ன அந்த ‘ஒத்த’ வார்த்தை..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதும் ரசிகர்கள் செக்யூரிட்டி என்று கத்திய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

டி20 உலகக்கோப்பை (T20 World Cup) தொடரின் 19-வது லீக் போட்டி நேற்று ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக டேரில் மிட்செல் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தலா 27 ரன்களும், கேப்டன் கேன் வில்லியம்சன் 25 ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை ஹரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளும், ஷஹீன் அப்ரிடி, இமாத் வாசிம் மற்றும் ஹபீஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 33 ரன்களும், ஆஷிப் அலி 27 ரன்களும், சோயப் மாலிக் 26 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில், இப்போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், நியூஸிலாந்து வீரர்களைப் பார்த்து ‘செக்யூரிட்டி, செக்யூரிட்டி’ (Security) பாகிஸ்தான் ரசிகர்கள் கோஷமிட்டனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு காரணம், நியூஸிலாந்து அணி சமீபத்தில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, போட்டி தொடங்கும் நாளன்று திடீரென நியூஸிலாந்து அணி விளையாட மறுத்தது. இதனால் நியூஸிலாந்து அணியிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம் பேச்சுவார்த்தை மேற்கொண்டது. ஆனாலும் மொத்த கிரிக்கெட் தொடரையும் ரத்து செய்துவிட்டு உடனே நியூஸிலாந்து அணி நாடு திரும்பியது.

இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் வீரர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த சூழலில் நேற்றைய டி20 உலகக்கோப்பை போட்டியின் போது பாகிஸ்தானிடம் நியூஸிலாந்து தோல்வியை தழுவியது. அதனால்தான் ‘செக்யூரிட்டி’ கூறி பாகிஸ்தான் ரசிகர்கள் கிண்டல் செய்தனர்.

அதேபோல் பாகிஸ்தான் வீரர் முகமது ஹபீஸ், இந்த வெற்றியை பாகிஸ்தான் பாதுகாப்பு வீரர்களுக்கு சமர்பிப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு மறைமுகமாக நியூஸிலாந்தை சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்