VIDEO: ‘கிரிக்கெட் வரலாற்றுல இப்படி நடந்து பார்த்ததே இல்ல’.. ‘இரண்டாக உடைந்த ஹெல்மெட்’.. மிரண்டுபோன வீரர்கள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் வீசிய பவுன்சரில் ஜிம்பாப்பே வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாப்பே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2 போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியும், 2-வது போட்டியில் ஜிம்பாப்பே அணியும் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில் இரண்டாவது டி20 போட்டியில் பாகிஸ்தான் வீரர் வீசிய பந்து ஜிம்பாப்பே வீரரின் ஹெல்மெட்டை உடைத்தது. நேற்று முன்தினம் நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஜிம்பாப்பே அணி முதலில் பேட்டிங் செய்தது.

இப்போட்டியின் 7-வது ஓவரை பாகிஸ்தான் வீரர் அர்ஷத் இக்பால் வீசினார். அப்போது களத்தில் நின்ற ஜிம்பாப்பே வீரர் கமுகுகான்வே, அர்ஷத் இக்பால் வீசிய பந்தை எதிர்கொண்டார். ஆனால் பந்து அதிவேக பவுன்ஸராக வந்து கமுகுகான்வேயின் ஹெல்மெட்டில் பலமாக அடித்தது. இதனால் ஹெல்மெட்டின் மேல்பகுதி உடைந்து தனியாக கழன்று விழுந்தது.

கிரிக்கெட் வரலாற்றில் இதுபோல் ஹெல்மெட் இரு பிரிவுகளாக உடைந்தது கிடையாது, இரண்டாக கீறல் விழுந்துள்ளது. ஆனால் இதுபோன்ற சம்பவம் அரிதான ஒன்று என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே ஹெல்மெட்டில் பந்து பலமாக அடித்ததால் கமுகுகான்வே சற்று நிலைகுழைந்து போனார். இதனால் மைதானத்தில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. உடனே ஜிம்பாப்வே உடற்தகுதி நிபுணர் வந்து கமுகுகான்வேவின் தலை மற்றும் கழுத்துப் பகுதியை ஆய்வு செய்தார். தலையில் இதுபோன்று பந்து அடித்தால், கன்கஸன் விதிப்படி அந்த பேட்ஸ்மேனுக்குப் பதிலாக வேறொரு பேட்ஸ்மேன் களமிறங்கலாம். ஆனால் சில நிமிட முதலுதவிக்குப் பின் கமுகுகான்வே மீண்டும் விளையாடினார். 34 ரன்கள் எடுத்திருந்தபோது டேனிஸ் அஜிஸ் ஓவரில் அவுட்டாகி வெளியேறினார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்