"மத்த 'டீம்' குடுமியே எங்க கையில தான்..." வெளிய போனாலும்... சும்மா 'solo'வா 'மாஸ்' காட்டும் 'சிஎஸ்கே'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பது பரபரப்பாக உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டும் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பறிபோயுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மட்டும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. டெல்லி, பெங்களூர் அணிகள் கிட்டத்தட்ட பிளே ஆஃப் வாய்ப்பின் விளிம்பில் இருந்தாலும் அவர்கள் இன்னும் முன்னேறவில்லை.

மற்ற அணிகளான கொல்கத்தா, ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் இன்னும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தான், பஞ்சாப், ஹைதராபாத் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள நேற்று நடந்த போட்டி முக்கியமானதாக அமைந்தது. ஏற்கனவே பிளே ஆஃப் சுற்றை சென்னை அணி இழந்துள்ள நிலையில், நேற்று கொல்கத்தா அணியுடன் மோதியது. இந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தால் ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய அணிகளுக்கு சற்று நெருக்கடி ஏற்பட்டிருக்கும். 

இதனால் அந்த மூன்று அணி ரசிகர்களுமே சென்னை அணிக்கு ஆதரவைத் தெரிவித்தனர். கொல்கத்தா வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற அவர்களுக்கு வாய்ப்பு எளிதாக இருந்த நிலையில்,  நேற்றைய போட்டியில் மிகவும் த்ரில்லிங்காக சென்னை அணி வென்றது. கடைசி 2 பந்துகளில் சிக்சருக்கு விட்டு ஜடேஜா சென்னையை வெற்றி பெறச் செய்தார்.

சென்னை வெற்றி பெற்றதன் காரணமாக, முதல் அணியாக மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. சென்னை அணிக்கு இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில், அந்த போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் தான் அவர்களுக்கான பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு பிரகாசமாகும். 

பிளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி இழந்தாலும், மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை நிர்ணயிக்கும் பொறுப்பு சென்னையிடம் தான் உள்ளது. நேற்றைய போட்டியில் மட்டும் 3 அணி ரசிகர்கள் சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்த்தனர். பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியிலும் மற்ற அணிகள் சென்னை அணி வெற்றி பெற வேண்டித் தான் எதிர்பார்க்கும் நிலை அதிகமுள்ளதாக தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்