'தோல்விக்கு' இதான் காரணம்.. 'அப்படி எத சொன்னாங்க?'.. முன்னாள் முதல்வரின் வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாண்ட சமீபத்திய உலகக் கோப்பை லீக் போட்டியில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்த விவாதங்கள் இந்தியாவில் பல்வேறு வகையிலும் எழுந்து வருகின்றன.

வீரர்களின் பெர்ஃபார்மன்ஸில் தொடங்கில் பெர்மிங்ஹாமின் மைதானம் வரை பல காரணிகளும் இந்திய வீரர்களின் தோல்வியில் பங்களித்திருப்பதாக பலரும் ஆய்வு செய்து வாதங்களை முன்வைத்துக்கொண்டிருக்கின்றனர். முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரும் உலகக் கோப்பை அணி வீரர்களின் விளையாட்டில் அதிருப்தி கருத்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய வீரர்களின் ஆரஞ்சு நிற ஜெர்ஸிதான் தோல்விக்குக் காரணம் என்கிற சர்ச்சைகள் இணையதளம் முழுவதும் எழத் தொடங்கியுள்ளன. சில வருடங்களுக்கு முன்புவரை, ‘பச்சை சட்ட போட்டா அடிப்போம்’ என்று பாகிஸ்தான் வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்குமான போட்டியில் இந்திய வீரர்களின் நிலைப்பாடாக இந்த டயலாக்கை விளையாட்டாக பயன்படுத்தினர்.

ஆனால் இம்முறை ஆரஞ்சு நிற ஜெர்ஸியில் இந்தியா விளையாடிய முதல் ஆட்டத்திலேயே தோல்வி அடைந்ததால், ஜம்மு & காஷ்மீர் முன்னாள் முதல்வரான மெகபூபா முஃப்தி கிண்டலாக விமர்சித்து ட்வீட் பதிவிட்டுள்ள சம்பவம் வைரலாகியுள்ளது. அந்த ட்வீட்டில், ‘நீங்கள் இதை மூடநம்பிக்கை என்றே வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் இதனை நான் சொல்லியே ஆகவேண்டும். இந்த (ஆரஞ்சு நிற) ஜெர்ஸிதான் இந்தியாவின் தோல்விக்கான காரணமாக இருக்க முடியும்’ என்று பதிவிட்டுள்ளார்.

ICCWORLDCUP2019, ICCWORLDCUP, TEAMINDIA, ENGVIND

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்