"இந்தியா 'டீம்'ல எல்லாம் ஓகே தான்.. ஆனா, இந்த ஒரு விஷயத்த நெனச்சா தான் ரொம்ப கவலையா இருக்கு.." காத்திருக்கும் மிகப்பெரிய 'சவால்'.. "என்ன செய்யப் போறாங்களோ??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை, இந்த போட்டி நடைபெறவுள்ள நிலையில், இரு அணிகளும் மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது. சமீப காலமாக, வெளிநாட்டு மைதானங்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வரும் அதே வேளையில், நியூசிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. பவுலிங், பேட்டிங் என அனைத்திலும் பலம் வாய்ந்த அணியாக அவர்கள் திகழும் நிலையில், முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பைத் தட்டி பறிக்க, இரு அணிகளும் கடுமையாக மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டரான விஜய் பரத்வாஜ் (Vijay Bharadwaj), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இந்திய அணியிலுள்ள சிக்கல் குறித்து பேசியுள்ளார்.
'இந்திய அணியில் கவலைக்குரிய ஒரு விஷயம் என்னவென்றால், அந்த அணியின் ஓப்பனிங் ஜோடி தான். அதிக அனுபவமில்லாத இளம் வீரர் சுப்மன் கில் ஒரு பக்கமும், இங்கிலாந்து மைதானங்களில் அதிக அனுபவமில்லாத ரோஹித் ஷர்மா மறுபக்கமும் தொடக்க வீரர்களாக களமிறங்கவுள்ளது பிரச்சனை தான்.
இதனை பயன்படுத்திக் கொண்டு, கோலி மற்றும் புஜாரா ஆகியோரை சீக்கிரம் களமிறக்க நியூசிலாந்து முயற்சியை செய்யும். இதனால், ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்திய அணிக்கு நல்லவொரு தொடக்கத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும். துவக்க வீரர்கள் சீக்கிரம் அவுட்டானால், நிச்சயம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் வரிசையும் குலைந்து விடும். இந்த சோதனையில், ரோஹித் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும்.
இந்திய அணி பேட்டிங் செய்யும் போது, உடனடியாக போட்டிக்குள் செல்ல வேண்டும். பேட்ஸ்மேன்கள் ஓரளவுக்கு செட் ஆகிய பின்னர் ரன் குவிப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. நீங்கள் சரியாக ஆட ஆரம்பித்தால், நிச்சயம் சதமடிக்க வேண்டும். ரோஹித் மற்றும் கில் ஆகியோர், 40 முதல் 50 ரன்கள் அடித்தால் அது போதுமானது என நினைக்கக் கூடாது' என விஜய் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இங்கிலாந்தில் 'கோலி'க்கு இருக்கும் 'சிக்கல்'.. "மாத்திக்காம இருந்தா அவருக்குத் தான் 'பிரச்சனையே'.." 'ஐடியா' கொடுத்த 'முன்னாள்' வீரர்!!
- "அடுத்த 'கேப்டன்' இவரு தான் போல!.." 'பிசிசிஐ' போடும் 'மாஸ்டர்' பிளான்??.. அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
- "'கோலி', 'ரோஹித்'த எல்லாம் உங்களால் ஒண்ணும் பண்ண முடியாது.. சும்மா பேசணுமேன்னு பேசாதீங்க.." 'அமீரை' தாறுமாறாக கிழித்த 'முன்னாள்' வீரர்!!
- "வேணும்னா பாருங்க.. இந்த 'டீம்' தான் 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் ஜெயிக்க போறாங்க.." காரணத்துடன் விளக்கிய 'முன்னாள்' வீரர்!!
- "நிச்சயம் அவரு கொஞ்சம் தடுமாற தான் போறாரு.. ஆனா, அவரு பண்ண வேண்டியது இது மட்டும் தான்.." 'ஹிட்மேனுக்கு' செம 'ஐடியா' கொடுத்த 'கோச்'!!
- "இந்த விஷயத்துல 'ரோஹித்' ரொம்ப கெட்டிக்காரரு.. அவரு இருந்தாலே எங்களுக்கு 'பிரச்சன' இருக்காது.." பாராட்டித் தள்ளிய 'ஷமி'!!
- "அவரை அவுட் எடுக்குறது ரொம்ப 'ஈஸி'.. 2 'Trick' மட்டும் போதும்.." 'ரோஹித்'தை திணறடிக்க, 'அமீர்' சொல்லும் 'ரகசியம்'!!
- "இன்னொரு நடராஜனா...?" ..இந்திய டெஸ்ட் அணியில்... முதல் முறையாக இடம் பிடித்து... திடீரென டிரெண்டாகும் இளம் வீரர்... யார் இவர்? அணியில் இடம் பிடித்தது எப்படி??
- நெருங்கும் 'டெஸ்ட்' சாம்பியன்ஷிப் இறுதி போட்டி.. 'இந்திய' அணியை அறிவித்த 'பிசிசிஐ'.. யார் யாருக்கு எல்லாம் 'வாய்ப்பு'?!
- "ஊரே Birthday'க்கு 'வாழ்த்து' சொன்னாலும், மனைவியோட 'wish'னா எப்பவும் 'ஸ்பெஷல்' தானே.." 'காதலில்' உருகி அன்பு 'மனைவி' போட்ட 'Post'.. இணையத்தில் இப்போ செம 'வைரல்'!!