ஐபிஎல் ஏலத்தில்.. சிரித்த முகத்துடன் திடீர் 'Entry' கொடுத்த நபர்.. "எல்லா டீமும் எந்திருச்சு கைதட்ட ஆரம்பிச்சுட்டாங்க"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டு நாட்களாக, பெங்களூரில் நடைபெற்று வந்த ஏலம், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

Advertising
>
Advertising

புதிய அணிகளான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகளுடன், மொத்தம் 10 அணிகள் ஐபிஎல் ஏலத்தில் பங்கெடுத்திருந்தது.

அனைத்து அணிகளும், தாங்கள் ஏற்கனவே திட்டம் போட்டு வைத்த வீரர்களைத் தூக்க, கடுமையான போட்டியிலும் ஈடுபட்டிருந்தது.

ஐபிஎல் அணிகள் தேர்வு

சில வீரர்களை எடுப்பதற்கு இரண்டு அணிகள், கடைசி வரை முட்டி மோதிக் கொண்ட சம்பவங்களும் அதிகம் நிகழ்ந்தது. ஒட்டுமொத்தமாக, இரண்டு நாட்கள் நடைபெற்ற ஏலம்  விறுவிறுப்பாகவே தான் சென்றுள்ளது. அது மட்டுமில்லாமல், சில அணியினரின் தேர்வு, நிச்சயம் அவர்களின் ரசிகர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

சரிந்து விழுந்த Hugh Edmeades

இந்நிலையில், முதல் நாள் ஏலம் நடைபெற்ற சமயத்தில், யாரும் எதிர்பாராத வகையிலான ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருந்தது. ஏலம் நடத்திக் கொண்டிருந்த 'Hugh Edmeades' திடீரென மேடையில் இருந்து சரிந்து கீழே விழுந்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் கண்டதும், பதறிப் போயினர்.

சீரான உடல்நிலை

உடனடியாக, அவருக்கு சிகிச்சை அளிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தொடர்ந்து, சிறிது நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி, ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில், சற்று நிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், அங்கிருந்த ஐபிஎல் அணியினரும், நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனைத் தொடர்ந்து, Hugh Edmeades- க்கு பதிலாக, சாரு ஷர்மா என்பவர், ஏலத்தை தொடர்ந்து நடத்தியிருந்தார்.

தொடர்ந்து நடத்திய சாரு ஷர்மா

ஐபிஎல் ஏலத்தின் இரண்டாம் நாளான இன்றும், சாரு ஷர்மா தான் ஐபிஎல் ஏலத்தை நடத்தி வந்தார். இந்நிலையில், ஐபிஎல் ஏலம் முடியும் தருவாயில், Hugh Edmeades திடீரென சிரித்த முகத்துடன் Entry கொடுத்தார். இதனை அங்கிருந்தவர்கள் யாரும் எதிர்பாராத நிலையில், அனைத்து அணியினரும் எழுந்து நின்று, கைதட்டி ஆர்ப்பரித்தனர்.

மாஸ் Entry

திடீரென சரிந்து விழுந்த Hugh Edmeades, மறுநாளே சிரித்த முகத்துடன் திரும்பி வந்ததால், அனைத்து அணிகளும் உற்சாகம் அடைந்தனர். அதே போல, ஐபிஎல் ஏலத்தை பார்த்து வந்த ரசிகர்களும், உற்சாகம் அடைந்து, Hugh ஐபிஎல் ஏல மேடைக்கு வந்ததை, கொண்டாடித் தள்ளினர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

IPL AUCTION 2022, HUGH EDMEADES, AUCTIONER, CHARU SHARMA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்