"தம்பி, நீங்க ஊருக்கு வேணா மாஸா இருக்கலாம்.. ஆனா என் முன்னாடி தூசு.." தனியாளாக 'RCB' அணியை பொளந்து கட்டிய 'ஜடேஜா'!!.. "அடேய், சோனமுத்தா போச்சா??"
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியை எதிர்கொண்ட பெங்களூர் அணி, 69 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முன்னதாக, இதுவரை 4 போட்டிகள் விளையாடியிருந்த பெங்களூர் (RCB) அணி, நான்கிலும் வெற்றி பெற்று, பலம் வாய்ந்த அணியாக விளங்கியது. இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி ஆடிய சென்னை அணி, 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து ஆடிய பெங்களூர் அணியில், அதிரடி வீரர்கள் பலர் இருந்த போதும், சென்னை அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், கடுமையாக திணறினர். இதனால், 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 ரன்களை மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. குறிப்பாக, இந்த போட்டியில், பெங்களூர் அணியை தனியாளாக ஜடேஜா (Jadeja) தவிடு பொடி ஆக்கினார்.
சென்னை அணி முதலில் பேட்டிங் செய்த போது, அந்த அணியின் ரன் ரேட், இடையே சற்று குறைந்தது. இதனால், சென்னை அணி 160 - 170 ரன்கள் வரை அடிக்கும் என்றே அனைவரும் கருதினர். ஆனால், எதிர்பாராத வகையில், பெங்களூர் வீரர் ஹர்ஷல் படேல் (Harshal Patel) வீசிய கடைசி ஓவரில், ஜடேஜா ருத்ர தாண்டவம் ஆடினார்.
மொத்தமாக, அந்த ஓவரில் 5 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன், 36 ரன்களை ஜடேஜா எடுத்தார். மேலும், ஒரு நோ பாலுடன் அந்த ஓவரில் 37 ரன்களை ஹர்ஷல் படேல் வாரி வழங்க, ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட அதிக ரன்னாக இது பதிவானது. முன்னதாக, இந்த சீசனில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரராக வலம் வந்த ஹர்ஷல் படேல், இந்த போட்டியிலும் 3 முக்கிய விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஆனால், இது அத்தனையும் சிதைக்கும் வகையிலான ஆட்டத்தை ஜடேஜா வெளிப்படுத்தினார்.
மொத்தமாக, 28 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஜடேஜா 62 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜடேஜா, பவுலிங்கிலும் தனது பங்கைக் கச்சிதமாக செய்து அசத்தினார். 4 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த ஜடேஜா, 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதே போல, ஒரு ரன் அவுட் மற்றும் கேட்ச் ஒன்றையும் ஜடேஜா எடுத்தார்.
ஒட்டு மொத்தத்தில், தனியாளாக பெங்களூரை பந்தாடிய ஜடேஜா, ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். இந்த ஐபிஎல் சீசனில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த பெங்களூர் அணியை சென்னை அணி வெற்றி கண்ட நிலையில், சென்னை அணிக்கும், ஜடேஜாவிற்கும் ரசிகர்கள் அதிகம் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'பவுலர்ஸ் பாவம் இல்லயா!?.. ஒவ்வொரு அடியும் அப்படி விழுது'!.. 'Mr.360 டிகிரி பட்டதுக்கு இன்னொரு வீரர் போட்டி'!.. கவாஸ்கர் நெகிழ்ச்சி!!
- "பையன் செம 'கிளாஸ்'ஸா ஆடுறாப்ல.. சீக்கிரமாவே இந்தியா 'டீம்'ல செலக்ட் ஆயிடுவாரு பாருங்க.." 'இளம்' வீரரை வேற லெவலில் பாராட்டிய 'சுனில் கவாஸ்கர்'!!
- 'யாரு பெருசுனு அடிச்சு காட்டு'!.. சிஎஸ்கே - ஆர்சிபி ரசிகர்கள் இடையே டிஜிட்டல் போர்!.. கதிகலங்கும் இணையம்!.. கூட்றா பஞ்சாயத்த!!
- ‘வெளிப்படையா சொல்லணும்னா, நாங்க அதை தவறவிட்டுட்டோம்’!.. தோல்விக்கு பின் சஞ்சு சாம்சன் சொன்ன பதில்..!
- 'அடிச்ச சதம் மட்டும் தான் உங்க கண்ணுக்கு தெரியும்!.. அதுக்கு பின்னாடி இருந்த ரண வேதனை'... பேச பேச உணர்ச்சி வசப்பட்ட படிக்கல்!!
- VIDEO: ‘பாய் தைரியமா கேளுங்க’!.. ரொம்ப கான்ஃபிடண்டா சொன்ன சிராஜ்.. 4-வது ஓவரில் நடந்த சுவாரஸ்யம்..!
- 'ஆர்சிபி-க்கு ஒரே குஷி தான் போல!.. ஓவரா ஆட வேண்டாம்!.. மொதல்ல 'இத' செய்யுங்க!.. இல்லனா எல்லாமே வீணாயிடும்'!.. விராட் கோலிக்கு வார்னிங் கொடுத்த ஆஷிஷ் நெஹ்ரா!!
- VIDEO: ‘மனசுல நின்னுட்டீங்க தலைவா..!’.. ஷூ லேஸை கட்டிவிட்டது யார் தெரியுமா..? வைரலாகும் வீடியோ..!
- VIDEO: 'அரைசதம் அடிச்ச உடனே...' 'கோலி பெவிலியனை பார்த்து செய்த சைகை...' எதுக்காக அப்படி பண்ணினாரு தெரியுமா...? - வைரல் வீடியோ...!
- ‘மேட்சை முடிச்சிறலாம்’!.. உடனே கோலி சொன்ன ‘அந்த’ வார்த்தை.. பரபரப்பான நேரத்தில் படிக்கலுக்கு கோலி சொன்ன ‘அட்வைஸ்’ இதுதான்..!