இந்த சம்பவம் ஞாபகம் இருக்கா..? ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் ‘கண்ணீரில்’ நனைய வைத்த நாள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட் உலகையே சோகத்தில் மூழ்க வைத்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸ் உயிரிழந்த நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் தனது 20 வயதில் நுழைந்த பிலிப் ஹியூஸ், அந்த அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் 1,535 ரன்களும், 25 ஒருநாள் போட்டிகளில் 826 ரன்களும் குவித்தார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்றில் தெற்கு ஆஸ்திரேலியாவுக்காக அவர் ஆடினார். கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி தொடங்கிய இப்போட்டியில் பிலிப் ஹியூஸ் பேட்டிங் செய்துகொண்டு இருந்தார். தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி அரை சதத்தை (63 ரன்கள்) கடந்தார்.

இதனால் அவரை அவுட் ஆக்கும் முயற்சியில் நியூ சவுத் வேல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான சீன் அபாட் பவுன்சர் ஒன்றை வீசினார். ஆனால் எதிர்பாராத விதமாக அந்த பந்து பிலிப் ஹியூஸின் கழுத்தில் பலமாக தாக்கியது. அடுத்த கணமே ஹியூஸ் மைதானத்தில் சுருண்டு விழுந்தார். கோமா நிலைக்கு சென்ற அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நவம்பர் 27ம் தேதி பிலிப் ஹியூஸ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணம் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் அந்நாட்டின் தேசியக்கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பிலிப் ஹியூஸ் அணிந்த 64 எண் கொண்ட ஜெர்ஸிக்கும் ஆஸ்திரேலிய அணி ஓய்வு அளித்தது. பிலிப் ஹியூஸை கவுரவிக்கும் அந்த எண் கொண்ட உடையை ஆஸ்திரேலியாவில் இனி எந்த வீரரும் அணிய மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பிலிப் ஹியூஸின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடுகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்