அரையிறுதியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி தோல்வி.. அடுத்த கணமே வீராங்கனை 'வீட்டின்' முன் நடந்த 'அதிர்ச்சி' சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடோக்கியோ ஒலிம்பிக்கில் அரையிறுதிச்சுற்றுவரை முன்னேறி இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாற்று சாதனை புரிந்துள்ள நிலையில், அவ்வணியின் வீராங்கனை வந்தனா கட்டாரியாவை சாதி பெயரைக் கூறி திட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஹாட்ரிக் கோல்கள் அடித்தவர் வந்தனா கட்டாரியா. ஒலிம்பிக் வரலாற்றில் இந்திய வீராங்கனைகளில் ஹாட்ரிக் கோல்கள் அடித்த முதல் பெண் வந்தனா என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியிடம் இந்திய மகளிர் அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இதனால் வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் பிரிட்டன் அணியுடன் இந்திய மகளிர் அணி மோதவுள்ளது.
இந்நிலையில், அர்ஜென்டினா அணியுடன் இந்திய அணி தோல்வி அடைந்த செய்தி கேட்டதும், இரு நபர்கள் உத்தரகாண்ட் மாநிலத்தின் ரோஷனாபாத்தில் உள்ள வந்தனா வீட்டின் முன்பு வந்து நின்று நடனமாடி, கிண்டல் செய்து, பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
இந்தச் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த வந்தனாவின் குடும்பத்தினர் வந்து பார்த்தபோது, அவர்களின் சாதிப் பெயரைக் கூறி அவதூறு செய்துள்ளனர். மேலும், இந்திய அணி தோற்றதற்கு அதிகமான தலித் பிரிவினரைச் சேர்த்ததுதான் காரணம் எனக் கூறி அவதூறு சொற்களால் திட்டிச் சென்றனர். அப்போது வந்தனாவின் குடும்பத்தாருக்கும், அந்த இரு நபர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் அந்த இரு நபர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து வந்தனா கட்டாரியாவின் சகோதரர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த போலீசார், அந்த நபர்களைத் தேடி வந்தனர். அப்போது போலீஸார் நடத்திய விசாரணையில் ஒருவர் அடையாளம் கண்டறியப்பட்டுக் கைது செய்யப்பட்டார். அவர் பெயர் விஜய் பால் என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் இருவர் மீதும் ஐசிபி 504, எஸ்சி, எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: ‘ஜெயிக்கறதுக்காக இப்படியா பண்றது’!.. ஒலிம்பிக்கில் இந்திய வீரருக்கு நடந்த கொடுமை.. கொதித்த நெட்டிசன்கள்..!
- என்ன பொசுக்குன்னு 'இப்படி' சொல்லிட்டீங்க...! 'ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வென்றது குறித்து கம்பீர் போட்ட ட்வீட்...' - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!
- 'தடை, அதை உடை'... 'புதிய சரித்திரத்தை எழுதிய இந்திய ஹாக்கி அணி'... 41 வருஷ தவத்திற்கு கிடைத்த பரிசு!
- 'இறுதி விநாடி வரை டஃப் கொடுத்த இந்திய அணி'!.. 'அரண்டு போன அர்ஜெண்டினா'!.. ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி அரையிறுதியில் நடந்தது என்ன?
- 'ஒலிம்பிக்கில் பயன்படுத்திய வாள்'!.. முதல்வர் ஸ்டாலினுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பவானி தேவி!.. வியப்பூட்டும் பின்னணி!
- ‘ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு அடுத்த பதக்கம்’.. வெண்கலம் வென்றார் முகமது அலியின் தீவிர ரசிகை..!
- இது சாதாரண விஷயம் இல்ல...! 'சட்டையை' கிழித்துக் கொண்டு ஓடிய 'ஒலிம்பிக்' வீரர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் ஆகும் புகைப்படம்...!
- "நூறுகோடி இந்தியர்களின் சார்பாக சொல்றேன்".. இந்திய மகளிர் ஹாக்கி அணியின்.... ரியல் கோச்சிடம் கோரிக்கை வைத்த 'சக் தே இந்தியா' கபிர் கான்!
- ஒலிம்பிக் ஹாக்கியில்... இந்திய மகளிர் அணியின் வரலாற்று சாதனை!.. 'சக் தே இந்தியா'!.. யார் இந்த ரியல் லைஃப் ஷாரூக் கான்?
- ‘தோக்குறமோ, ஜெயிக்கிறமோ, மொதல்ல சண்டை செய்யணும்’!.. முகத்தில் 13 தையல்.. வேண்டாம் என தடுத்த மனைவி.. ஒலிம்பிக்கில் ஒரு ‘சார்பட்டா’ கபிலன்..!