இவங்கள 'யாரு'னு தெரியுதா...? அன்னைக்கு 'ரெட் கார்பெட்' வச்சு வெல்கம் பண்ணினாங்க...! 'ஊரே பெருமையா பார்த்துச்சு...' - தற்போதைய 'துயர' நிலையை நினைத்து வேதனை...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒலிம்பிக் ஜோதி ஏந்திய ஒருவர், ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்படும் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தின் பின் தங்கிய மாவட்டம் திப்ருகார். இந்த மாவட்டத்தில் இருந்து தான் பலர் தற்போது தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு வேலைக்கு வருகின்றனர்.
அதோடு, இந்த மாவட்டத்தை சேர்ந்த பிங்கி கர்மாகர் என்பவர் தான் கடந்த லண்டன் ஒலிம்பிக்கில் ஜோதி எந்தியவர். ஜோதி ஏந்தியபின் இந்தியா வந்த போது அவருக்கு மேள தாளத்துடன், சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவர் ஒலிம்பிக் ஜோதி ஏந்தியதில் அவரது ஊர் மக்களே சந்தோஷத்தில் திளைத்தனர். ஆனால், தற்போது பிங்கி கர்மாகர் தன் திப்ருகார் மாவட்டத்தின் பார்பூரா டீ எஸ்டேட்டில் ரூ.167 தினக்கூலிக்கு வேலைக்குச் சேர்ந்தார், தற்போது, திருத்தப்பட்ட கூலியாக ரூ.205 பெறுகிறார்.
இதுகுறித்து கூறும் கர்மாகர், 'நான் பார்பூரா டீ எஸ்டேட்டில் தினக் கூலியாக பணியாற்றி வருகிறேன். ஒலிம்பிக் ஜோதி ஏந்தியவர்களுக்கு தினசரி ஏதோ பணம் தருவதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் எனக்கு இதுவரை ஏதும் கிடைக்கவில்லை.
கடந்த 9-10 ஆண்டுகளாக கஷ்டத்தில் தான் இருக்கிறேன். என்னை தெரிந்த மக்களோ ஏன் இப்படி இருக்கிறாய் என கேட்டு தினமும் என்னை கஷ்டப்படுத்தி வருகின்றனர்.
நான் இப்போது பட்டப்படிப்பு படிக்கிறேன். இங்கும் பணம் தான் முக்கிய பங்காற்றுகிறது. எந்த ஒரு தரப்பிலிருந்தும் எனக்கு உதவியில்லை.
ஒரு சில நேரங்களில் அசாம் தேயிலை சமூகத்திலிருந்து வந்ததுதான் என் நிலைமைக்குக் காரணமோ என்று கூட நினைக்கிறேன்
எனக்கு வில்வித்தையில் பெரிய வீரராக உருவாக வேண்டும். நான் ஒரு இரவு பள்ளியை நடத்தி வருகிறேன். லண்டன் ஒலிம்பிக் டார்ச் ஏந்திய நினைவுகளுடனேயே சமூக நல செயல்களை செய்து வருகிறேன்' என வேதனையுடன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்
‘கல்யாணமான பெண்ணுக்கு காதல் கடிதம்’.. மளிகைக் கடைக்காரர் மீது வழக்கு.. நீதிமன்றம் பரபரப்பு தண்டனை..!
தொடர்புடைய செய்திகள்
- 'இப்போ சொல்ல வேண்டாம்...' 'விளையாட்டு முடிஞ்சு வரட்டும்...' - 'விஷயத்தை' கேள்விப்பட்டு உடைந்து கதறிய 'ஒலிம்பிக்' வீராங்கனை...!
- என்ன பொசுக்குன்னு 'இப்படி' சொல்லிட்டீங்க...! 'ஹாக்கியில் இந்திய அணி பதக்கம் வென்றது குறித்து கம்பீர் போட்ட ட்வீட்...' - கொந்தளிக்கும் நெட்டிசன்கள்...!
- 'அந்த மனசு இருக்கே'... 'ஒலிம்பிக்கில் நடந்த அதிசயம்'... உலகையே திரும்பிப்பார்க்க வைத்த வீரர்கள்!
- 'என்ன வயசு ஆவுது இந்த பாப்பாவுக்கு'!?.. ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை தட்டித் தூக்கிய சிறுமி!.. உலக சாதனையை அசால்ட்டாக நிகழ்த்திய சம்பவம்!
- நாங்க 'அத' பண்ணலன்னா... எங்களால 'ஹேப்பியா' இருக்க முடியாது...! - வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானுவிற்கு 'பிரபல பீட்சா' நிறுவனம் அளித்துள்ள வாக்குறுதி...!
- 'எவ்வளவு பேரோட கனவு!.. எல்லாமே போச்சா'!?. விளையாட்டு வீரர்களுக்கு இடியாக வந்த தகவல்!.. ஒலிம்பிக் போட்டிகள் ரத்தாகிறதா?
- VIDEO: 'கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...' கையில 'அத' வச்சிட்டு பக்கா 'பிளானோடு' தான் வந்துருக்காங்க...! 'ஒலிம்பிக் ஜோதியோட கிராஸ் பண்ணினப்போ...' - திடீர்னு இளம்பெண் செய்த காரியம்...!
- 'தோள் கொடுக்க தாய் தந்தையர் இல்லை'!.. 'ஓடத் துடிக்கும் கால்களுக்கு ஷூ இல்லை'!.. ஓடி ஓடியே ஒலிம்பிக்-ஐ அடைந்த அசாத்திய கனவு!.. யார் இந்த ரேவதி?
- வெளிநாட்டுக்கு படிக்க, வேலைக்கு போறீங்களா..? அப்போ இந்த ‘சான்றிதழ்’ முக்கியம்.. மத்திய அரசு ‘புதிய’ அறிவிப்பு..!
- 'ஒரு காலத்தில ராஜா மாதிரி வாழ்ந்த மனுஷன்!.. நாடே 'தலை'ல தூக்கி வச்சு கொண்டாடுச்சு!'.. 'இப்ப எப்படி இருக்காரு தெரியுமா?'.. கலங்கவைக்கும் சம்பவம்!