WTC Final முடிஞ்ச கையோட வந்த ‘முக்கிய’ தகவல்.. உற்சாகத்தில் ‘ஐபிஎல்’ அணிகள்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி முடிவடைந்துள்ள நிலையில், ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இப்போட்டியில் போராட்டமே இல்லாமல் இந்திய அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக புஜாரா, ரோஹித் ஷர்மா, ஜடேஜா போன்ற நட்சத்திர வீரர்கள் சொதப்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

ஆனாலும் நியூஸிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐசிசி நடத்தும் ஒவ்வொரு தொடரிலும் அரையிறுதி, இறுதிப்போட்டி வரை வந்து தோல்வியடைந்தே நியூஸிலாந்து அணி சென்றுள்ளது. குறிப்பாக, கடந்த 2019-ம் ஆண்டு நடந்த ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மேட்ச் டிராவாகி, பின்னர் 2 சூப்பர் ஓவரும் டிராவாகி இங்கிலாந்திடம் கோப்பையை பறிகொடுத்தது. அதனால், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை நியூஸிலாந்து அணி வென்றது இந்திய ரசிகர்களிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் தொடர் குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டன. இதனால் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் இப்போட்டியில் பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இங்கிலாந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடமாட்டார்கள் என தெரிவித்துள்ளது.

தற்போது இதுகுறித்து Cricket.com ஊடகத்தில் பேசிய ஐபிஎல் அணியின் உரிமையாளர்களில் ஒருவர், ‘நாங்கள் இப்போது மிகவும் நிம்மதியாக இருக்கிறோம். வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் கலந்து கொள்வது குறித்து இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்களுடன் பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் நியூஸிலாந்து வீரர்கள் விளையாடுவதை உறுதிப்படுத்தியுள்ளோம்’ என அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் நியூஸிலாந்து வீரர்கள் விளையாடுவது உறுதியாகியுள்ளதால், ஐபிஎல் அணிகளுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்