‘கொஞ்ச நேரம் தான்’... ‘ஒட்டு மொத்தமாக எல்லாத்தையும் மாற்றி விடுவார்’... 'பயிற்சியாளர் சொன்ன சுவாரஸ்யம்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகாயம் காரணமாக அவதிப்பட்ட வந்த நிலையிலும், அதனை பொருட்படுத்தாமல் கொல்கத்தா அணிக்காக ஆடிய ஆண்ட்ரு ரசல் களத்திற்கு வந்தார் என்று அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் ஆடிய கொல்கத்தா 191 ரன்கள் எடுக்க, அதற்கு அடுத்து ஆடிய ராஜஸ்தான் 131 ரன்களில் சுருண்டது. நேற்று காயத்துடன் களத்தில் வந்து ஆடிய ரசல் 11 பந்தில் 3 சிக்ஸ் உட்பட 25 ரன்கள் எடுத்தார். காயத்தோடு இவர் அடித்த 25 ரன்கள், கொல்கத்தா அணியின் ரன் ரேட்டை உயர்த்தி உள்ளது.
ரசலின் ஆட்டம் குறித்து பேட்டி அளித்த மெக்கலம், ‘காயத்திலும் கட்டாயம் வென்று ஆக வேண்டிய போட்டி என்பதால், ஆண்ட்ரு ரசல் கொல்கத்தா அணிக்காக களமிறங்கி ஆட வந்தார். ஆனால் அவர் முழுமையாக குணமடையவில்லை. அவர் முழு பிட்னசில் இல்லை. ஆனாலும் அவர் அணிக்காக களமிறங்கினார். இதனால் அவரால் பவுலிங் செய்யவும் முடியவில்லை.
ஆபத்தான சூழ்நிலையில் இருந்தாலும், அணி வெற்றி பெற வேண்டும், முக்கியமான போட்டி என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் ரசல் தனது காயத்தை பொருட்படுத்தாமல், உடனே களத்திற்கு செல்ல வேண்டும் என்று துடித்துக் கொண்டு இருந்தார். அணிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவர் 100% குணமடையவில்லை. ஆனாலும் அணிக்காக ஆடுகிறார். அவர் ஒரு 15-20 நிமிடம் ஆடினார். மொத்தமாக ஆட்டத்தையே மாற்றிவிட்டார்.
அவர் எங்கள் அணியின் தூண் போல இருக்கிறார். இதனால்தான் காயத்தை கூட அவர் கணக்கில் கொள்ளவில்லை. அவர் உலகின் சிறந்த டி-20 வீரர்களில் ஒருவர். அவர் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஆனால் ஒரே ஒரு போட்டியில் அவர் பார்மிற்கு திரும்பினால் போதும், எல்லாமே மொத்தமாக மாறிவிடும்’ என்று அணியின் பயிற்சியாளர் மெக்கலம் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- “அதாகப்பட்டது ரசிகர்களே.. உங்களுக்கு சொல்றது என்னன்னா..!”.. CSK ‘வெற்றிக்கு’ பின் தோனியின் ‘வைரல்’ பேச்சு!
- ‘சான்ஸ் இருந்தும்’... ‘நூழிலையில் தகர்ந்த கனவு’... ‘நினைச்சத செய்ய முடியல’... ‘ரொம்ப வேதனையா இருக்கு!’
- அவுட் கொடுத்த ‘அம்பயர்’.. வேகமாக வந்து ‘ரிவ்யூ’ கேட்க சொன்ன டுபிளிசிஸ்.. கடைசியில் நடந்த ‘ட்விஸ்ட்’!
- ‘துணிந்து அத நாங்க பண்ணல’... ‘முதல்ல பேட்டிங் பண்றவங்க கண்டிப்பா இதப் பண்ணனும்’... ‘ஒப்புக்கொண்ட கேப்டன்’!
- “மொதல்ல இவங்க ஒழுங்கா இல்லனா தூக்குங்க!”... ஐபிஎல் போட்டிகளில் அடுத்தடுத்து நடக்கும் கடுப்பு சம்பவங்கள்.. கொதிக்கும் கிரிக்கெட் பிரபலங்கள்!
- அதெப்படி ‘அவுட்’ இல்லாம போகும்.. அம்பயருடன் ‘கடும்’ வாக்குவாதம்.. என்ன ஆச்சு கோலிக்கு..?
- 'சீக்கிரத்திலே அணிக்கு வந்துருவாரு’... ‘உற்சாகமாக காத்திட்டு இருக்கோம்’... ‘நம்பிக்கை தந்த கேப்டன்’... ‘மகிழ்ச்சியில் ரசிகர்கள்’!
- இன்னைக்கு ‘கடைசி’ மேட்ச்.. வேற வழியே இல்ல.. ‘தல’ அத பண்ணியே ஆகணும் .. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!
- ‘கோலியே கொஞ்சம் மிரண்டுதான் போயிட்டார்!’ .. “இவரோட யார்க்கர் இருக்கே!” .. அஸ்திவாரத்தையே ‘சைலண்ட்டாக’ அசைத்த ‘புதிய’ டெத் பவுலர்!
- தோனிக்கு அப்றம் ‘கோலிக்கு’ தான் இப்டி நடந்திருக்கு.. ‘அவர்’ வந்தாலே மனுஷன் அவுட் ஆகிறாப்ல பாவம்..!