டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிச்சாதான் எங்க வீட்டுக்கு ‘சாப்பிட’ வருவேன்னு சொல்லிட்டார்.. ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன ‘சுவாரஸ்ய’ தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் தனது பயிற்சியாளர் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிச்சாதான் எங்க வீட்டுக்கு ‘சாப்பிட’ வருவேன்னு சொல்லிட்டார்.. ஸ்ரேயாஸ் ஐயர் சொன்ன ‘சுவாரஸ்ய’ தகவல்..!
Advertising
>
Advertising

இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 345 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களும், சுப்மன் கில் 52 ரன்களும், ஜடேஜா 50 ரன்களும் எடுத்தனர்.

Now I can invite coach for dinner at home, says Shreyas Iyer

இதனை அடுத்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 296 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டாம் லதாம் 95 ரன்களும் வில் யங் 89 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியை பொறுத்தவரை அக்சர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை தொடர்ந்து இந்தியா தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் குறித்து ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துள்ளார். அப்போது தோனி கூறிய அறிவுரை குறித்து அவர் பேசிய கூறினார். அதில், ‘ஜூனியர், சீனியர் என்ற பாகுபாடு இல்லாமல் பழகக்கூடியவர் தோனி. பயிற்சியில் தீவிரமாக கவனம் செலுத்தினால் எல்லா விஷயங்களும் தானாக நடக்கும் என்று அவர் கூறினார். இதை அப்படியே நான் கடைபிடித்து வருகிறேன்’ என ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ‘என்னுடைய இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் எனது பயிற்சியாளர் பிரவீன் ஆம்ரே தான். டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்காத வரை எனது வீட்டிற்கு சாப்பிட வர மாட்டேன் எனக் கூறிவிட்டார். இப்போது என் முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசி உள்ளேன். அதனால் என் வீட்டிற்கு அவர் வருவார் என்று நம்புகிறேன்’ என ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

SHREYASIYER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்