'உண்மையிலே நம்ம தல எவ்வளவு கெத்து'... 'எப்படியும் ஜெயிப்போம்ன்னு நினைச்ச ஜோகோவிச்க்கு காத்திருந்த அதிர்ச்சி'... 'விரக்தியில் செய்த சம்பவம்'... வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் விளையாடினர். தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஜோகோவிச் நிச்சயம் வென்று விடுவார் என்பதே பலரின் கணிப்பாக இருந்தது. ரசிகர்களும் ஜோகோவிச் தான் வெற்றி பெறுவார் என எண்ணினார்கள்.

ஆனால் பலரின் கணிப்பைப் பொய்யாக்கும் விதத்தில் இந்த போட்டியின் தொடக்கம் முதலே மெட்வடேவ் ஆதிக்கம் செலுத்தி வந்தார். ஜோகோவிச் எவ்வளவு முயன்றும் இறுதியில் முடியாமல் போனது. இதனால்  மெட்வடேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் உலகின் நம்பர் 1 வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

இதனால், கடந்த 2005ம் ஆண்டுக்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை மெட்வடேவ் பெற்றுள்ளார். 25 வயதான மெட்வடேவ் இந்த ஆண்டு மார்ச் 15 முதல் தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் பட்டியலில் உலகின் 2ம் இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தோல்வியை தாங்க முடியாத ஜோகோவிச் விரக்தியின் உச்சத்தால் தனது டென்னிஸ் பேட்டை தரையில் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோ வைரலான நிலையில் நெட்டிசன்கள் பலரும் இந்திய முன்னாள் கேப்டன் தோனியை குறிப்பிட்டு வெற்றியோ, தோல்வியோ தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் பொறுமையோடு இருக்கும் தோனியை பாராட்டியே ஆக வேண்டும் என பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்