VIDEO : 'யு.எஸ்' ஓபன் 'டென்னிஸ்' தொடரில் இருந்து தகுதி 'நீக்கம்',,.. 'நம்பர்' 1 வீரருக்கு வந்த 'சோதனை',,.. அதிர்ச்சியில் 'ரசிகர்'கள்... நடந்தது என்ன??

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் (US Open) போட்டி நியூயார்க் (Newyork) நகரில் நடைபெற்று வரும் நிலையில், இந்த போட்டித் தொடரில் இருந்து நம்பர் ஒன் வீரரும், 17 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (Novak Djokovic) தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயினின் பாபிலோ கரீனோ பஸ்டாவை (Pablo Carreno Busta) எதிர்த்து ஜோகோவிச் விளையாடினார். அப்போது 5 - 6 என்ற கணக்கில் தனது முதல் செட்டை ஜோகோவிச் இழந்தார். இதனால் சற்று கோபமடைந்த ஜோகோவிச், பந்தை டென்னிஸ் கோர்ட்டுக்கு வெளியே அடித்தார். அவர் அடித்த பந்து எதிர்பாராதவிதமாக போட்டி நடத்தும் பெண் அதிகாரி ஒருவரின் கழுத்தில் பலமாக தாக்கியுள்ளது. இதனால் அந்த பெண் வலியில் துடித்துள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னரே அந்த பெண் இயல்பு நிலைக்கு திரும்பினார். இந்த சம்பவத்தால் அதிர்ந்து போன ஜோகோவிச், தனது செயலுக்கான விளக்கத்தை பெண்ணிடம் அளித்தார். எனினும், ஆட்டத்தின் விதிமுறைகள் படி, ஜோகோவிச் தகுதி நீக்கமே செய்யப்பட்டதாக ரெஃப்ரி அறிவித்தார். இதனால் கரீனோ வெற்றி பெற்றதாகவும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் வருத்தத்துடன் ஜோகோவிச் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

18 - வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் பட்டம் வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்