'புதிய பயிற்சியாளர் விசயத்தில்'... 'அவரலாம் கேட்கணும்னு கட்டாயமில்ல'... தேர்வுக் குழு அதிரடி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் குறித்து கேப்டன் விராட் கோலியின் தனிப்பட்ட விருப்பத்திற்கு, பயிற்சியாளர் தேர்வுக் குழு உறுப்பினர் பதில் கூறியுள்ளார்.

உலகக் கோப்பையுடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியாளர்கள் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. வெஸ்ட் இண்டீஸ் தொடரையொட்டி 45 நாட்கள் அவர்களுக்கான பணிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தப் பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமை விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கிடையில், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, ‘ரவி சாஸ்திரியுடன் நல்ல நட்புறவுடன் இருக்கின்றோம். தனிப்பட்ட முறையில் அவர் பயிற்சியாளராக மீண்டும் வந்தால் மகிழ்ச்சி என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், இது குறித்து பயிற்சியாளர் தேர்வுக் குழு உறுப்பினர் அன்சுமன் கெய்க்வாட் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். அதில், ‘சரியான திட்டமிடல், அணி மேலாண்மை, தொழில்நுட்ப நிபுணத்துவம், நல்ல உடல் தகுதி ஆகியவற்றை கொண்ட சிறந்த பயிற்சியாளரை தேடி வருகிறோம். விராட் கோலி தனது விருப்பத்தை கூறியிருக்கிறார். ஆனால் பயிற்சியாளர் தேர்விற்கு சில அடிப்படை தகுதிகளை வைத்திருக்கிறோம். அதில் மீண்டும் ரவிசாஸ்திரி தேர்வானால், நிச்சயம் அவரை கணக்கில் கொள்வோம்.

யாரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை செய்ய வேண்டிய கட்டாயம் எங்களுக்கு இல்லை. மகளிர் அணி பயிற்சியாளரை நாங்கள் தானே நியமித்தோம். கேப்டனுடன் ஆலோசிக்க வேண்டும் என்பது எந்தவிதத்திலும் கட்டாயமில்லை. அது பிசிசிஐ அமைப்பை பொருத்தது இந்த விவகாரம்’ என்றார். கபில்தேவ் தலைமையிலான பயிற்சியாளர் தேர்வுக் குழுவில் அன்சுமன் கெய்க்வாட் மற்றும் மகளிர் அணி முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவர்களே புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIRATKOHLI, RAVISHASTRI, COACH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்