இது சாதாரண விஷயம் இல்ல...! 'சட்டையை' கிழித்துக் கொண்டு ஓடிய 'ஒலிம்பிக்' வீரர்...! என்ன காரணம்...? - டிரெண்டிங் ஆகும் புகைப்படம்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வாங்கிய உற்சாகத்தில் நார்வே வீரர் சட்டையை கிழித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் ஆடவர் பிரிவுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் இன்று (03-08-2021) நடைபெற்றுள்ளது. அந்த போட்டியில் நார்வே வீரர் கார்ஸ்டன் வார்ஹோம் பந்தய தூரத்தை 45.94 வினாடிகளில் கடந்து உலக சாதனைப் படைத்தார்.

முதல் இடம் பெற்ற கார்ஸ்டன் வார்ஹோம்மிற்கு ஒலிம்பிக் தங்கப்பதக்கமும் உறுதி செய்யப்பட்டது. இதில் அமெரிக்காவின் ராய் பெஞ்சமின் 46.17 வினாடிகளிலும், பிரேசில் வீரர் அலிசன் சாண்டோஸ் பந்தய தூரத்தை 46.72 வினாடிகளில் கடந்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்நிலையில் தங்கள் நாட்டிற்கு தங்கம் பெற்று தந்த கார்ஸ்டன் வார்ஹோம் உற்சாக மிகுதியில் மேல் சட்டையை கிழித்து கூச்சலிட்டுள்ளார். வார்ஹோம்மின் இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்